தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடியாக க்ளாசிக் சினிமா காலத்திலேயே வலம் வந்த ஜோடி தான் ஜெமினி கணேசன் – சாவித்ரி. ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் ஆகி இருந்தாலும், ஜெமினி கணேசன் - சாவித்ரி ஜோடி தான் நிலைத்திருக்கிறது.
1934-ம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த சாவித்ரி, 1951-ம் ஆண்டு வெளியான பாதாள பைரவி என்ற படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 1952-ல் வெளியான கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சாவித்ரி, பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சிவாஜியுடன் இவர் நடித்த பாசமலர், மற்றும் பாவ மன்னிப்பு உள்ளிட்ட பல திரைப்படங்கள் சாவித்ரிக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது.
1953-ம் ஆண்டு வெளியான மனம்போல் மாங்கல்யம் என்ற படம் தான் ஜெமினி கணேசன் சாவித்ரி இணைந்து நடித்த முதல் திரைப்படம். பி.புள்ளையாக இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றது. இந்த முதல் படத்திலேயே ஜெமினி கணேசன் – சாவித்ரி இடையே காதல் மலர்ந்துள்ளது. ஒருமுறை இந்த படத்தின் படப்பிடிப்பு தான் லேட்டாக வருவேன் என்று ஜெமினி கணேசன் இயக்குனர் புள்ளையாவிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
இதன் காரணமாக ஜெமினி வருவதற்குள் சாவித்ரி தொடர்பான காட்சிகளை படமாக்கலாம் என்று நினைத்த அவருக்கு சாவித்ரி, ஜெமினியை பார்க்காமல் தான் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டேன் என்று சொல்ல, சாவித்ரியை தனது மகள்போல் பார்த்துக்கொண்ட புள்ளையாவும், இவரை வற்புறுத்தாமல் விட்டுள்ளார். அதன்பிறகு ஜெமினி வந்ததும் அவரை கட்டிபிடித்து அழுதுள்ளார் சாவித்ரி. அதன்பிறகு படப்பிடிப்பு நடந்துள்ளது.
இதன்பிறகு ஜெமினி கணேசன் – சாவித்ரி இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக பத்திரிக்கைளில் தகவல் வெளியானது. இவர்கள் திருமணத்திற்கு தடையாக இருந்தவர் சாவித்ரியின் பெரியப்பா சௌத்ரி. இவர்கள் திருமணம் குறித்து, இயக்குனர் புள்ளையா சௌத்ரியிடம் பேசியபோது, ஏற்கனவே திருமணமான ஒருவருடன் எப்படி எனது மகளை திருமணம் செய்துகொடுப்பது. இது நடக்காது என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
அதன்பிறகு சாவித்ரியை கண்காணிக்க ஆட்களை போட்ட சௌத்ரி, ஒருமுறை வெளியூர் சென்றிருந்தபோது, சாவித்ரி ஜெமினி கணேசனுடன் கொடைக்கானல் சென்றுள்ளார். இது பற்றி ஊரில் இருந்த வந்தபோது தெரிந்துகொண், சௌத்ரி, படப்பிப்புக்கு போனால் தானே இருவரும் சந்திப்பார்கள் என்று கூறி சாவித்ரியை வீட்டு சிறையில் அடைத்தவிட்டார். அறை கதவை பூட்டியதால் சாவித்ரி உள்ளே மாட்டிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார்.
அப்போது சென்னையில் மழையுடன் சேர்ந்து புயலும் அடித்ததால் எதேர்ச்சையாக பூட்டிய கதவு திறக்க, அங்கிருந்து தப்பித்த சாவித்ரி, இனிமேல் இங்கு இருக்க கூடாது என்று நினைத்து நள்ளிரவு என்று கூட பார்க்காமல், மழையில் நனைந்துகொண்டே சென்று ஜெமினி கணேசன் வீட்டு கதவை தட்டியுள்ளார் சாவித்ரி. இந்த வீட்டில் அவரை வரவேற்ற ஜெமினி கணேசனின் முதல் மனைவி புஷ்பவள்ளி, அவருக்கு துண்டு கொடுத்து உபரித்துள்ளார். அதன்பிறகு சில நாட்களில் ஜெமினி சாவித்ரி திருமணம் நடைபெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“