கண்ணதாசன் - இளையராஜா கூட்டணியில் மெகாஹிட் பாடல்... நடிப்பில் சொதப்பிய நடிகை : எந்த பாடல் தெரியுமா?
கண்ணதாசன் - இளையராஜா இருவரும் இணைந்து பணியாற்றியது 5 வருடங்கள் தான் என்றாலும் கூட இந்த கூட்டணியில் வந்த அத்தனை பாடல்களும் பெரிய ஹிட் பாடல்களாக அமைந்தது.
கண்ணதாசன் - இளையராஜா இருவரும் இணைந்து பணியாற்றியது 5 வருடங்கள் தான் என்றாலும் கூட இந்த கூட்டணியில் வந்த அத்தனை பாடல்களும் பெரிய ஹிட் பாடல்களாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கவியரசர் கண்ணதாசன் இளையராஜாவுடன் இணைந்து சில ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார், இவர்கள் இணைந்து செயல்பட்டது 5 வருடங்கள் தான் என்றாலும் கூட இந்த கூட்டணியில் வந்த அத்தனை பாடல்களும் பெரிய ஹிட் பாடல்களாக அமைந்தது. இந்த வகையில் வந்த ஒரு ஹிட் பாடலுக்கு நடிகை சரியாக நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Advertisment
1979-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் என்ற படத்தை இயக்கிய இவர், 3-வது படமாக புதிய வார்ப்புகள் என்ற படத்தை இயக்கியிருந்தார். விரும்பாத ஒருவரை திருமணம் செய்துகொண்ட பெண்ணை அவளது கணவனே காதலனுடன் சேர்த்து வைப்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில், பாக்யராஜ் நாயகனாக அறிமுகமானார். ரதி அக்னிகோத்ரி நாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு முதலில் நாயகனாக தேர்வு செய்யப்பட்டவர் இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் தான். ஆனால் வேலை பளு காரணமாக அவர் நடிக்காததால் அந்த கேரக்டரில் பாக்யராஜ் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே சமயம், பாக்யராஜ் குரல் அந்த வாத்தியார் கேரக்டருக்கு சரியாக பொருந்ததாதால், கங்கை அமரன், பாக்யராஜூவுக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பார். இந்த படம் வெளியாக காலக்கட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் வரும் முக்கிய பாடல்களில் ஒன்று ‘’வான் மேகங்களே வாழ்த்துங்கள்’’ என்ற பாடல். இளையராஜா இசையில் கவியரசர் கண்ணதாசன் இந்த பாடலை எழுதியிருந்தார். மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி இணைந்து பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்றும் கொண்டாடப்படும் ஒரு பாடலாக இருக்கிறது. இந்த பாடல் காட்சியை படமாக்கும்போது, தமிழ் நடிகராக பாக்யராஜ் சரியாக உதட்டை அசைத்து நடித்து அசத்தியுள்ளார்.
Advertisment
Advertisements
படத்தில் நாயகியாக நடித்த ரதி அக்னிகோத்ரிக்கு தமிழ் தெரியாது என்பதால், சரியாக உதட்டை அசைத்து நடிக்க சிரமப்பட்டுள்ளார். படத்தின் இயக்குனர் பாரதிராஜா எவ்வளவோ முயன்றும், அவருக்கு உதட்டு அசைவு சரியாக வரவில்லை என்பதால், இறுதியில் நடிக்கும்போது ‘’ஒன் டூ த்ரி’’ என்று சொல்லிக்கொண்டே நடிக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அவரும் நடிக்க அப்படி அந்த காட்சி படமாக்கப்பட்டு வெளியானது. இந்த பாடலில் அவரை உற்று கவனித்தால் மட்டுமே உதட்டசைவு சரியாக இல்லாததது தெரியவரும் மற்றபடி கண்ணதாசன் வரிகளில் இளையராஜா இசையமைத்த இந்த பாடல் பெரிய ஹிட் பாடல் என்பதில் சந்தேகமில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“