இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் – பாடகி ஜென்சி முதல்முறையாக இணைந்து பாடிய ஒரு பாடல் கேட்பதற்கு மட்டும் தான் ஆனால் பார்ப்பதற்கு சரியான பாடல் அல்ல என்று பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன தெரியுமா?
Advertisment
தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் வைத்து அதிக படங்கள் இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். ஏ.வி.எம். நிறுவனத்தின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் இவர், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் கடந்த 1979-ம் ஆண்டு வெளியான படம் கடவுள் அமைத்த மேடை. சிவக்குமார் சுமித்ரா இணைந்து நடித்த இந்த படததில், மேஜர் சுந்தர்ராஜன், சுருளி ராஜன், வடிவுக்கரசி ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்திற்கு, கவிஞர் வாலி திரைக்கதை வசனம் எழுதியிருந்த நிலையில், அனைத்து பாடல்களையும் அவரே எழுதியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘மயிலே மயிலே உன் தோகை எங்கே’ என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – பாடகி ஜென்சி முதல்முறையாக இணைந்து பாடிய இந்த பாடல், கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இந்த பாடல் வீடியோவில் பார்ப்பதற்கு அவ்வளவு சரியான பாடலாக இருக்காது என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் கூறியுள்ளார்.
பொதுவாக ஒரு பாடலை பதிவு செய்யும்போது அந்த பாடல் காட்சியில் நடிக்கப்போவது யார் என்பதை தெரிந்துகொண்டு, அவருக்கு ஏற்றபடி குரல் வளம் உள்ள ஒருவரை தான் பாடல் பாட தேர்வு செய்வார்கள். அந்த வகையில் இந்த பாடலை பாடிய பாடகி ஜென்சி ஆண்டனி, தனது குழந்தைத்தனமாக குரலில் சிறப்பாக பாடி அசத்தியிருப்பார். ஆனால் இந்த பாடல் காட்சியில், நடித்திருந்தவர் நடிகை சுமித்ரா. ஜென்சி ஆண்டனி குரலில் இந்த பாடல் வீடியோவாக பார்க்கும்போது சுமித்ராவுக்கு இந்த குரல் அவ்வளவு பொருத்தமாக இல்லை.
அதேபோல் இவ்வளவு அருமையான பாடலை, படமாக்குவதில் படக்குழுவினர் சற்று அலச்சியமாக இருந்துள்ளனர். நன்றாக நடனத்துடன் எடுக்கவேண்டிய இந்த பாடலை. சிவக்குமார் சுமித்ரா இருவரையும் நடக்க வைத்தே படமாக்கி இருப்பார்கள். அதனால் இந்த பாடல் கேட்பதற்கு மட்டும்தானே தவிர பார்ப்பதற்கு இல்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“