இளையராஜாவின் இசையில் கவிஞராக அறிமுகமாகி இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவரை விட்டு பிரிந்த வைரமுத்து, மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் எழுதி வந்த நிலையில், இருவரும் பாட்டிலேயே ஒருவரை ஒருவர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஒற்றை இசை கருவியில் இசைமைத்து ஒரு பாடலை உருவாக்கிய இளையராஜா அதில் வைரமுத்துவை வம்புக்கு இழுத்திருப்பார்.
Advertisment
1970-களில் இறுதியில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தனக்கு போட்டி யாருமே இல்லை என்பது போல் தனது இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார். இளையராஜா இசை இருந்தால் போதும், வேறு எதுவும் வேண்டாம் படத்தை நாங்கள் வெளியிடுகிறோம் என்று பலரும் சொல்லிய காலம் அது. அதே எந்த இசையமைப்பாளர்களுக்கும் கிடைக்காத ஒரு பெருமை இளையராஜாவுக்கு கிடைத்துள்ளது. இவரது பெயரில் பல பாடல்கள் வந்துள்ளன.
அந்த வகையில் கடந்த 1988-ம் ஆண்டு வெளியாக அக்னி நட்சத்திரம் படததில், ‘’ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’’ என்ற பாடல் இடம்பெற்றது. பெரும்பாலும் இளையராஜாவின் பெயரில் வரும் பாடலை அதிகமாக கவிஞர் வாலி தான் எழுதியிருப்பார். இந்த பாடலையும் அவர் தான் எழுதியிருந்தார். இந்த படம் வெற்றி பெற்றதை போல் இந்த பாடலும் பெரிய ஹிட்டாக அமைந்து இன்றுவரை பல இளைஞர்கள் உச்சரிக்கும் ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது. மேலும் இந்த பாடலை ரிதம் பேட் என்ற ஒற்றை இசைக்கருவியை வைத்து இளையராஜா இசையமைத்திருப்பார்.
அதேபோல் இந்த படம் வந்த காலக்கட்டத்தில் இளையராஜா பற்றிய பாடல்களை எழுத வாலி பெரிதும் விரும்பியுள்ளார். வைரமுத்து இளையராஜா பிரிந்த காலக்கட்டத்தில் வந்த இந்த பாடலில், நேற்று இல்லை நாளை இல்லை எப்போவுமே நான் ராஜா கோட்டை இல்லை கொடியும் இல்லை அப்பவும் நான் ராஜா என்று வைரமுத்துவை சீண்டும் விதமாக இளையராஜா பாடியுள்ளார் என்று அப்போதே கருத்துக்கள் வெளியாகி இருந்தது. அந்த காலக்கட்டத்தில் இருவருக்கும் நடந்து வந்த பனிப்போது எப்போது நேராடி போராக மாறியுள்ளது என்று சொல்லலாம்.. இந்த தகவலை ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“