பாடல் கம்போசிங்கின்போது பாரதிராஜா கூட்டிவந்த ஒருவரை, புதிய ஆட்களை கூட்டி வந்து என் கழுத்தை ஏன் அறுக்குற என்று இளையராஜா கேட்க, அவரையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு பாடலை கொடுத்துள்ளார் ஒரு கவிஞர். அவர் யார் தெரியுமா?
Advertisment
தமிழ் சினிமாவில், இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் என்பதை தாண்டி தமிழ் சினிமாவிற்கு பல சிறந்த நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வகையில் இவர் அறிமுகப்படுத்திய ஒரு கவிஞர் தான் வைரமுத்து. இப்போது வைரமுத்து – இளையராஜா இடையே மோதல் இருந்து வந்தாலும், ஆரம்பத்தில் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய அனைத்து பாடல்களும் ஹிட் அடித்துள்ளது.
1980-ம் ஆண்டு மணிவண்ணன் கதையில் பாரதிராஜா இயக்கிய படம் நிழல்கள். ராஜசேகரன், ரோஹினி, ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த பாடல் கம்போசிங் நடந்தபோது, புதியவர் ஒருவர் பாடல் எழுதினால் நன்றாக இருக்கும் என்று இளையராஜா சொல்ல, அப்போது வைரமுத்து ஞாபகம் பாரதிராஜாவுக்கு வந்துள்ளது. மொழிபெயர்ப்பு துறையில் வேலையில், இருந்த வைரமுத்துவை தொடர்புகொண்டுள்ளார்.
அடுத்த நாள் வைரமுத்து கம்போசிக்கு வந்துவிட்ட நிலையில், இளையராஜா டியூனை வாசித்துள்ளார். இந்த டியூனை கேட்ட வைரமுத்து வெளியில் எழுந்து சென்றுள்ளார். அப்போது இளையராஜா பாரதிராஜாவிடம், இப்படி புது ஆட்களை கூட்டி வந்து ஏன்யா என் கழுத்த அறுக்குற என்று கேட்டுள்ளார். அப்போ உள்ளே என்ட்ரி ஆன வைரமுத்து தான் எழுதிய பல்லவியை கொடுத்துள்ளார். அதை படித்து பார்த்த இளையராஜா அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்துள்ளார்.
இந்த பாடல் தான் நிழல்கள் படத்தில் இடம் பெற்ற ‘’பொன் மாலை பொழுது’’ என்ற பாடல். இந்த பாடலை இன்று கேட்டாலும் புதிய பாடல் போன்ற உணர்வை கொடுக்கும். நிழல்கள் படம் வெற்றியை தவறவிட்டாலும், அதில் இடம்பெற்ற பாடல் இன்றுவரை ரசிகாகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“