ஒரே ராகத்தில் அமைந்த 2 பாடல்களில் ஒன்றறை எம்.எஸ்.வி – ராமமூர்த்தி கூட்டணியும், மறறொரு பாடலை இசையமைப்பாளர் இளையராஜாவும் இசையமைத்துள்ளது. இதில் முன்னணியில் இருப்பது எந்த பாடல் தெரியுமா?
70-களின் இறுதியில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பளராக உருவான இவரை தேடி பல இயக்குனர்கள் படையெடுக்க தொடங்கினர். 1990களில் ஏ.ஆர்.ரஹ்மான் என்டரி ஆவதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசை.
படத்தின் போஸ்டரில் இசை இளையராஜா என்று இருந்தாலே இந்த படம் ஹிட்டாகிவிடும் என்ற நிலை இருந்த காலக்கட்டத்தில் எம்.எஸ்.வி இளையராஜாவுடன் இணைந்து ஒரு சில படத்திற்கு இசையமைத்துள்ளார். அதேபோல் இளையராஜா சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் இசை உலகில் முன்னணியில் இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமூர்த்தி கூட்டணி. இவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்துவிட்டாலும் எம்.எஸ்.வி தனி ஆளாக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
அந்த வகையில், 1961-ம் ஆண்டு வெளியான பாக்கியலட்சுமி படத்தில் எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்திருந்தனர். இளம் விதவயான சௌகார் ஜானகி பாடக்கூடிய ஒரு பாடல் தான் ‘’ மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’’ என்ற பாடல். அன்றைய காலக்கட்டத்தில் மட்டுமல்லாமல் இன்றும் இந்த பாடல் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. கவியரசர் கண்ணதாசன் இந்த படத்திற்கான பாடல்கள் மட்டுமல்லாமல்இந்த பாடலையும் எழுதியிருந்தார்.
இந்த ராகத்திலேயே இளையராஜாவும் ஒரு பாடலை உருவாக்கியுள்ளார். அந்த படம் வைதேகி காத்திருந்தாள். 1984-ம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரேவதி ஒரு இளம் விதவையாக நடித்திருப்பார். அவர் பாடுவது போன்று வரும் ஒரு பாடல் தான் அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள்’’ என்ற பாடல். பாக்கியலட்சுமி – வைதேகி காத்திருந்தாள் ஆகிய இந்த இரு படங்களுமே ஏறக்குறைய ஒரு கதையம்சத்தை கொண்ட படங்கள் தான்.
அதேபோல் இந்த இரு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற பாடல்கள் ஒரு மாதிரியாக அமைந்திருக்கும். இந்த பாடலை கவிஞர் வாலி எழுதியிருப்பார். இந்த இரு பாடல்களுக்கும் இடையே பல வித்தியாசங்கள் இருந்தாலும், மாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் மென்மையாகவும், அழகு மலர் ஆட கோபத்தின் வெளிப்பாடான பாடலாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.