தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் சந்திரபாபு. பல படங்களில் காமெடி குணச்சித்திரம் மற்றும் பல்வேறு கேரக்டர்களில் நடித்துள்ள இவர், ஒரு நடிகையுடன் இணைந்து நடிக்கும்போது அவர் தன்னை தொடாமல் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பழம்பெரும நடிகராக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவரிடம் உதவியாளராக இருந்தவர் தான் சந்திரபாபு. பாடல் பாடுவதில் ஆர்வம் கொண்ட இவர், தனது குடும்பம் வறுமையில் இருந்தபோது, தான் பாடல் பாடி கிடைத்த ரூ200 பணத்தில், ஆங்கில பாடல்களை கேட்கும் ஆர்வத்தின் காரணமாக, புதிய கிராமபோன் வாங்கி வந்துள்ளார்.
இரவு முழுவதும் பாடல் பாடிவிட்டு, காலை 6 மணிக்கு தூங்கி மதியம் 12 மணிக்கு விழிப்பது தான் சந்திரபாபுவின் வழக்கமாக இருந்துள்ளது. மேலும் சந்திரபாபுவின் அப்பா அவரை தினமும் திட்டிக்கொண்டே இருந்துள்ளார். ஆனாலும் சந்திரபாபு தனது ஆர்வத்தின் மிகுதியாக அதை கண்டுகொள்ளாமல் தனது திறமையில் கவனம் செலுத்தியுள்ளார். தனது உதவியாளராக இருந்து கொண்டு பாடிக்கொண்டே இருக்கிறானே என்று யோசித்த டி.ஆர்,மகாலிங்கம் அவருக்கு தனது படத்தில் வாய்ப்பு கொடுக்கிறார்.
1947-ம் ஆண்டு வெளியான தனா அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சந்திரபாபுவுக்கு, 1951ம் ஆண்டு மோகன சுந்தரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்பிறகு மூன்று பிள்ளைகள் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 1952-ம் ஆண்டு வெளியான நிலையில், அதே ஆண்டு டி.ஆர்.மகாலிங்கம் தயாரிப்பு இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான படம் தான் சின்னதுரை. டி.ஜி.லிங்கப்பா இசையமைத்த இந்த படத்தில் சந்திபாபு ஒரு பாடலை பாடியிருந்தார்.
‘’போடா ராஜா பொடிநடையாக’’ என்று தொடங்கும் இந்த பாடலை பாடியிருந்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக யூட்லிங் பாடலை பாடியதும், ஆங்கில பாடலை பாடியதும் சந்திரபாபு தான். அதேபோல் முதல் வெஸ்டர்ன் பாடல்களை பாடியதும் அவர்தான். இதில் 1951-ம் ஆண்டு வெளியான மோகன சுந்தரம் படத்தை தயாரித்த டி.ஆர்.மகாலிங்கம், அந்த படத்தில் சந்திரபாபுவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த படத்தில் ஒரு பாடல் மட்டும் பாடியிருந்த சந்திரபாபு, அதை ஆங்கிலத்தில் பாடியிருந்தார்.
இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது, சந்திரபாபுவுடன் நடித்த நடிகை சுகுந்தலா, தன்னை தொடாமல் நடிக்க வேண்டும் என்று சந்திரபாபுவிடம் கூறியுள்ளார். 1950 காலக்கடத்தில் சாதி தீண்டாமை அதிகரித்து இருந்த காலக்கட்டம் என்பதால், சந்திரபாபு கிறிஷ்டியன் என்பதால் அவர் தன்னை தொட கூடாது என்று நடிகை சகுந்தலா கூறியதாக, சந்திரபாபுவின் சகோதரர் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“