தமிழ் க்ளாசிக் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி போல் நடிப்பில் உச்சம் தொட்ட நடிகர் ஜெய்சங்கர். 1965-ம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் அதே ஆண்டு 5 படங்களில் தொடர்ந்து நாயகனாக நடித்தார். இதில் ஜெய் சங்கர் நடிப்பில் வெளியான 3-வது படமான பஞ்சவர்ணக்கிளி படத்தில் பாலு சேகர் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
நடிக்க தொடங்கிய 3-வது படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்த ஜெய்சங்கரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக ஜெய்சங்கர் இந்த படத்தின் ஒரு கேரக்டர் வில்லனாக நடித்ததற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள பிரபலங்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்த நடிப்பை பார்த்த சின்னப்ப தேவர், ஜெய்சங்கரை பாராட்டியுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து வில்லன் வேடத்தில் நடிக்காதே பிறகு வில்லன் என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்று அறிவுரை கூறியுள்ளனார். பஞ்சவர்ணக்கிளி படத்தில் கே.ஆர்.விஜயா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவரும் வளர்ந்து வரும் நடிகை என்பதால், படத்தின் இயக்குனர் கே.சங்கர் படப்பிடிப்பு தளத்தில் கே.ஆர்.விஜயாவை ஜெய்சங்கருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெய்சங்கர் அடுத்ததாக நீ என்ற படத்தில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் முதல் முதலாக ஒன்றை எழுத்தில் தலைப்பு வைக்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்ற இந்த படத்தில் நாயகியாக ஜெயலலிதா நடித்திருந்தார். பஞ்சவர்ணக்கிளி படத்தில் இயக்குனர் கே.ஆர்.விஜயாவை ஜெய்சங்கருக்கு அறிமுகம் செய்து வைத்தது போல் நீ படத்தின் இயக்குனர், டி.ஆர்.ராமண்ணா ஜெயலலிதாவை அறிமுகம் செய்து வைக்கவில்லை. ஆனாலும் ஜெயலலிதா தானே ஜெய்சங்கரை தேடி போய் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
இந்த அறிமுகத்தில் உங்களின் பஞ்சவர்ணக்கிளி படம் பார்த்தேன். நீங்கள் சிறப்பாக நடித்துள்ளீர்கள் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல் பஞ்சவர்ணக்கிளி படத்தை பார்த்த அப்படத்தின் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உனது வில்லன் நடிப்பை பார்த்து உனக்கு ரசிகனாகிவிட்டேன் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த ஜெய்சங்கர் இரு வல்லவர்கள் படத்திற்கு பிறகு தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்படுது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“