/indian-express-tamil/media/media_files/5y5WLOD0gnxMZHsqiJSD.jpg)
நடிகர் ஜெய்சங்கர்
தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை நாயகன் என்று போற்றப்பட்டவர் ஜெய்சங்கர். சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தன்னை தேடி வரும் பலருக்கும் உதவிகள் செய்துள்ள இவர் தன்னை நம்பி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைய கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்துள்ளது
1965-ம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஜெய்சங்கர் அதே ஆண்டு, பஞ்சவர்ணக்கிளி என்ற படத்தில் ஹீரோ வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்து அசத்தினார். இந்த படத்தின் மூலம் பாராட்டுக்களை பெற்றிருந்த அவர், அடுத்து யார் நீ, வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள் என தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
வாரம் வாரம் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் இவரது படங்கள் வெளியாகும் என்ற பேச்சுக்கள் இவர் நடித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. இந்தியன் ஜேம்ஸ்பாண்டு என்று அழைக்கப்படும் ஜெய்சங்கர், சினிமாவில் அடுத்தடுத்து தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக உயர்ந்திருந்தாலும் ஒரு கட்டத்தில் அவருக்கான மார்க்கெட் குறைந்தததால் பட வாய்ப்பும் குறைந்துள்ளது.
அந்த நேரத்தில் ஒரு பெரும் பணக்காரர் ஒருவர் ஜெய்சங்கரை அணுகி என்னிடம் பணம் அதிகமாக இருக்கிறது. ஒரு படத்தை தயாரித்து வெளியிடும் அளவுக்கு நான் பணம் வைத்திருக்கிறேன். நீங்கள் படத்தில் நடியுங்கள் நான் தயாரிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ஜெய்சங்கர் நீங்கள் இப்போது எந்த படத்தையும் தயாரிக்க வேண்டாம். நான் நடிக்கும்போது உங்களிடம் சொல்கிறேன் அப்போது நீங்கள் தயாரியுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.
அவர் சென்றபின், ஜெய்சங்கரின் உதவியாளர், அவர் பெரும் பணக்காரர் உங்களை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படுகிறார் ஏன் வேண்டாம் என்று சொன்னீர்கள் என்று கேட்டுள்ளார். இதை கேட்ட ஜெய்சங்கர், அவர் தயாரிப்பார் நான் நடித்துவிடுவேன். ஆனால் படத்தை யார் வாங்குவார்கள். இப்போது எனக்கு மார்க்கெட் இல்லை. அவர் என்னை வைத்து படம் எடுத்தால் நஷ்டம் தான் அடைவார். நமக்கு பணம் வருகிறது என்பதால் அடுத்தவர்களுக்கு நஷ்டம் வந்துவிட கூடாது என்று ஜெய்சங்கர் கூறியுள்ளாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.