தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்துள்ள கவியரசர் கண்ணதாசன், இன்கம்டேக்ஸ் ஆபீஸ்க்கு பவுன்ஸ் ஆன செக் கொடுத்ததும், ஒரு கார் பயணத்தில் 6 பாடல்கள் எழுதி முடித்ததும் பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் முக்கிய கவிஞராக இன்றும் போற்றப்படும் கண்ணதாசனுக்கு ஒருமுறை வருமானவரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. இதை பார்த்த அவர் தனது உதவியாளரிடம் கொடுத்து ஆடிட்டரிடம கொடுத்துவிடுமாறு கூறியுள்ளார். நோட்டீசை பெற்றுக்கொண்ட ஆடிட்டர் கண்ணதாசனுக்கு போன் செய்து நீங்கள் ஒருமுறை வருமானவரிதுறை அலுவலகம் சென்று பேசுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்படி வருமானவரித்துறை சென்ற கண்ணதாசன், பேசியபோது, எனக்கு, 15 பிள்ளைகள் 3 மனைவிகள், மற்றபடி உதவியாளர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் என்னை நம்பித்தான் இருக்கிறார்கள். அதனால் நாம் சம்பாதிப்பது இதற்கே சரியாக போய்விடும் என்று சொல்ல, மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் உங்களை விட்டாலும், மேலிடத்தில் கேள்வி கேட்பார்கள் என்று சொல்ல, சரி நான் ரூ1000 10 செக் உங்களுக்கு தருகிறேன் மாதாமாதம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி செக் கொடுத்துள்ளார்.
இதில் முதல் மாதம் செக் சரியாக பாஸ் ஆகிவிட்ட நிலையில், 2-வது மாதம், செக் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகிவிட்டது. இது குறித்து கண்ணதாசனிடம கேட்டபோது அவர், ஆமாம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதன்பிறகு கண்ணதாசன் நேரில் சென்று பேசி சரி செய்த நிலையில், வருமானவரித்துறை ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருமாவரித்துறை பற்றியே விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
ஒருமுறை சின்னப்ப தேவர், ஒரு படம் எடுக்கும்போது அவசமாக அந்த படத்திற்க பாடல்கள் எழுத வேண்டிய சூழலில், கண்ணதாசனை தேட, அவர், பெங்களூருவில் இருப்பதாக தெரியவர, தேவர் நேரடியாக தனது காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது கண்ணதாசனை பெங்களூருவில் இருந்து மைசூர் வழியாக, ஊட்டிக்கு அழைத்து வரும் வழியில், கண்ணதாசன் 6 பாடல்களை எழுதியுள்ளார். இந்த பாடல்கள் அனைத்தும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
6 பாடல்களையும் கண்ணதாசன் ஊட்டி வருவதற்கு முன்பே முடித்துவிட்டதால், மீண்டும் பெங்களூர் திரும்பி போக, தேவரிடம் பணம் கேட்க, இப்போது உனக்கு கொஞ்சம் பணம் தருகிறேன். மீதி பணத்தை சென்னையில் வீட்டில் கொடுத்துவிட சொல்கிறேன் என்று கூறி அவரை அனுப்பி வைத்துள்ளார் சின்னப்ப தேவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“