க்ளைமேக்ஸ் காட்சியில் வசனமே இல்லை பாடல்கள் தான் க்ளைமேகஸ் என்று இயக்குனர் சொல்ல, அதை கேட்டு கண்ணதாசன், அந்த பாடலுக்காக, 22 சரணங்களை எழுதி கொடுத்து பெரிய ஹிட் பாடலான மாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் உயிர்கொடுத்தவர் கண்ணதாசன். கவியரசர் என்று அழைக்கப்படும் கண்ணதாசன், தமிழ் சினிமாவில், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். இசையமைப்பாளர்
எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து கண்ணதாசன் எழுதிய அனைத்து பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதேபோல் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில், அவர் தனது கம்பெனிக்கு வந்து பாடல் எழுத வேண்டும் என்று கூறி, பல கார்கள் வந்து நிற்கும் சூழலும் இருந்தது. பாடல் மட்டுமல்லாமல், கவிதை, புத்தகம், கட்டுரை என எழுதியுள்ள கண்ணதாசன், சினிமாவில் எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்பதை ஆசிரியர் என பன்முக திறமையுடன் வலம் வந்தார். தனது வாழ்நாளின் இறுதிவரை கண்ணதாசன் திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வந்துள்ளார்.
அதேபோல், இயக்குனர்கள் என்ன கேட்கிறார்களே அதை உடனடியாக தனது பாடலில் கொடுக்கும் திறமை கொண்ட கண்ணதாசன், இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் கேட்டுக்கொண்டதால், ஒரு க்ளைமேக்ஸ் காட்சிக்காக 22 சரணங்களை எழுதி கொடுத்துள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1975-ம் ஆண்டு வெளியான படம் அபூர்வ ராகங்கள். ரஜினிகாந்த் அறிமுகமான இந்த படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீவித்யா, மேஜர் சுந்தர்ராஜன், ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில், க்ளைமேக்ஸ் காட்சியில் எந்த வசனமும் இல்லை. இதனை பாடல் மூலமாகவே கன்வே பண்ணப்போகிறேன் என்று எம்.எஸ்.வி கண்ணதாசன் இருவரிடமும் கே.பாலச்சந்தர் கூறியுள்ளார். அதற்கு ஏற்றபடி, படப்பிடிப்பின் இடையில் எந்தெந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது என்று அவ்வப்போது அப்டேட்களை கொடுத்துக்கொண்டே இருந்துள்ளார். ஒருநாள் இந்த இறுதிப்பாடலுக்கான கம்போசிங் நடைபெற்றுள்ளது.
அப்போது கே.பாலச்சந்தர், பல்லவி கேள்வியின் நாயகனே என்று இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதை கேட்ட கண்ணதாசன், உடனடியாக, கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதில் ஏதையா என்று கூறியுள்ளார். இதை வைத்து பல்லவிக்கு டியூன் போட்டுவிட்ட நிலையில், சரணத்தை நாளை பார்த்துக்கொள்வோம் என்று கூறிவிட்டு கண்ணதாசன் புறப்பட்டுள்ளார். மறுநாள் காலை வந்த கண்ணதாசன், அந்த பாடலுக்கு 22 சரணங்களை கொடுத்துள்ளார். இதில் எதை விடுவது எதை எடுத்துக்கொள்வது என்று தெரியாமல் திண்டாடியுள்ளார் கே.பாலச்சந்தர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“