கண்ணதாசன் எழுதிய தெலுங்கு டப்பிங் பாட்டு இது; ஆனா அப்படி தெரியவே தெரியாது!
கே.விஸ்வநாத் இயக்கத்தில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் சலங்கை ஒலி. நாட்டியத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
சலங்கை ஒலி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை தெலுங்கில் இருந்து டப்பிங் செய்து எழுதிய கண்ணதாசன், அந்த நடை தெரியாமல் சிறப்பாக எழுதியதாக நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Advertisment
கே.விஸ்வநாத் இயக்கத்தில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் சலங்கை ஒலி. நாட்டியத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட்டது. இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
கமல்ஹாசன், ஜெயபிரதா, எஸ்.பி.சைலஜா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் 40 வருடங்கள் கடந்திருந்தாலும், சலங்கை ஒலி படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று காலம் கடந்து நிலைத்திருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் வரும் மௌனமான நேரம், தகிட தகிமி ஆகிய இரு பாடலகளம் எவர்கிரீன் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளது. இந்த இரு பாடல்கள் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கவியரசர் கண்ணதாசன் சாதாரணமாக ஒரு பாடலை எழுதிவிடுவார்.
பிற்காலத்தில் இந்த பாடல் பேசப்படும் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அப்போது பாடல்கள் உருவாகும். சலங்கை ஒலி படத்தில் வரும் மௌனமான நேரம் பாடல் ஒரு தெலுங்கு பாடல். அதை தமிழில் மறு உருவாக்கம் செய்தவர் தான் கண்ணதாசன். ஆனால் அந்த பாடல் தெலுங்கில் இருந்து வந்தது என்று தெரியாத வகையில் வார்த்தைகளை அமைத்திருப்பார். அதேபோல்த்தான், தகிட தகிமி என்ற பாடலையும் தெலுங்கில் இருந்து எழுதியிருப்பார். இந்த இரு பாடல்களுமே காலம் கடந்து நிலைத்திருக்கிறது என்று கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.