சிவாஜி படத்தின் பாடல் கம்போசிங்கின்போது, சிங்கப்பூரில் நடைபெறும் ஒரு பாடல் என்பதால், கண்ணதாசன் முதலில் மலாய் மொழி வார்த்தைகளை வைத்து பாடலை தொடங்கியுள்ளார்.
Advertisment
1975-ம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெயலலிதா, மஞ்சுளா, சந்திரபாபு, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அவன்தான் மனிதன். சிவாஜியை மனதில் வைத்து எழுத்தாளர் ஜி.பாலசுப்பிரமணியன் இந்த படத்திற்கான கதையை எழுதியுள்ளார். ஆனால் கதையை கேட்ட சிவாஜி, இப்போது நான் உச்சத்தில் இருக்கிறேன். சோகமாக முடியும் இந்த படத்தின் கதையில் நான் நடிக்க வேண்டுமா முடியாது என்று கூறியுள்ளார்.
இதன் பிறகு கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடிப்பில் இந்த படம், 1971-ம் ஆண்டு கஸ்தூரி நிவாசா என்ற பெயரில் வெளியாகி, பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அதன்பிறகு மற்ற மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், படத்தை பார்த்த சிவாஜி இந்த கதையை மிஸ் செய்துவிட்டோமே என்று நினைத்து அதன் ரீமேக்கில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த படம் தான் அவன்தான் மனிதன்.
இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த படத்தில் சிவாஜி மஞ்சுளா இருவருக்கும் இடையேயான பாடல் காட்சி ஒன்று இருக்கிறது. சிங்கப்பூரில் நடப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, அப்போ பாடலை மலாய் மொழியில் இருந்து தொடங்கலாமா என்று கண்ணதாசன் கேட்டுள்ளார். இதை கேட்டு படக்குழுவினரே ஆச்சியமடைந்துள்ளனர்.
Advertisment
Advertisement
கண்ணதாசனுக்கு எப்படி மலாய் தெரியும் என்று யோசிக்க, இப்போது அவரின் உதவியாளர் மலாய் – தமிழ் டிஷ்னரியை எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதன்பிறகு அதில் இருந்து முதல் இரு வார்த்தைகளை ஜெனிதா வனிதா என்று பாடலை தொடங்கியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில, பெரிய ஹிட் பாடலாக அமைந்துள்ளது. டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்த பாடலில் ஜெனிதா என்றால் அழகு என்றும் வனிதா என்பது மலாய் மொழியில் பெண்னை குறிக்கும் என்பது பொருளாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“