தமிழ் க்ளாசிக் சினிமாவின் முன்னணி கவிஞரான இன்றுவரை போற்றப்பட்டு வரும் கவியரசர் கண்ணதாசன், மாதா கனவில் வந்து சொல்லி ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் வித்தியாசமான இருந்தாலும், அவ்வளவாக பிரபலமாகவில்லை.
Advertisment
1971-ம் ஆண்டு கே.தங்கப்பன் இயக்கத்தில் வெளியான படம் அன்னை வேளாங்கன்னி. ஸ்ரீவித்யா, சிவக்குமார், ஜெயலலிதா, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், நடிகர் கமல்ஹாசன் ஏசு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஜி தேவராஜன் என்பவர் இசையமைத்த இந்த படத்திற்கு, கண்ணதாசன் வாலி ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.
தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியான அன்னை வேளாங்கன்னி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. வேளாங்கன்னி மாதாவின் பெருமைகளை எடுத்துச்சொல்லும் வகையில் அமைந்துள்ள இந்த படத்தில், வித்தியாசமான ஜாலியான ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த பாடலை டி.எம்.சௌந்திரராஜன், மாதுரி ஆகியோர் பாடியிருந்தனர்.
இந்த படத்திற்கான பாடல் எழுதும் வாய்ப்பு வரும்போது கண்ணதாசன் பாடல் எழுதும் நிலையில், இல்லை, இப்போதைக்கு அதற்கான நேரமும் இல்லை என்று கூறியுள்ளார். அதன்பிறகு ஒருநாள் பேராவூரணிக்கு சென்று ஒரு ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார். அன்று இரவு அவரது கனவில் வந்த வேளாங்கன்னி மாதா, எனக்காக ஒரு பாட்டு எழுது மகனே என்று கூறியுள்ளார். கனவு கண்டவுடன் எழுந்த கண்ணதாசன், மாதாவே வந்து சொல்லிவிட்டார். இந்த படத்திற்கு பாடல் எழுதுவோம் என்று முடிவு செய்துள்ளார்.
Advertisment
Advertisement
இந்த படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அவர் வித்தியாசமாக எழுதிய ஒரு பாடல் மட்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகாமல் போய்விட்டது என்று சொல்லலாம். பேராவூரணியில் தூங்கியபோது கனவு வந்ததால், இந்த பாடலில் பேராவூரணியையும் சேர்த்துக்கொண்ட கண்ணதாசன் ‘’பேராவூரணி சின்னக் கருப்பி’’ என்று தொடங்கும் இந்த பாடலை எழுதியிருந்தார். முற்றிலும் கிண்டலாக அமைந்துள்ள இந்த பாடல் இன்றுவரை கண்ணதாசன் எழுதிய பாடல்தான் என்பது பலருக்கும் தெரியாது.
அன்னை வேளாங்கன்னி படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பாடல்களும் ஹிட் அடித்தது. அதே சமயம் இந்த படத்தில் கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ். பாடி ஹிட் அடிக்காத பெரிதும் பிரபலமாகாத ஒரே பாடல் இந்த பாடல் தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“