தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்து தான் இல்லாவிட்டாலும் தனது பாடல்கள் மூலம் வாழ்ந்துகொண்டிருக்கும் கவியரசர் கண்ணதாசன், தனது வாழ்நாளில் 3 நடிகைகளை மட்டுமே புகழ்ந்து பேசியுள்ளார். அதில் முதல் நடிகை டி.ஆர்.ராஜகுமாரி, அடுத்து மனோரமா அதற்கு 3-வது இடத்தில் இருப்பவர் நடிகை தேவிகா.
பிரமிளா என்ற பெயருடன் தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழில் அறிமுகமான இவர், நெஞ்சில் ஓர் ஆலயம் உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே ஒரு ஆழமான நட்பு இருந்துள்ளது. கண்ணதாசன் தயாரித்த பெரும்பாலான படங்களில் தேவிகா தான் நாயகியாக நடித்துள்ளார். அவர் நாயகியாக இல்லாமல் கண்ணதாசன் தயாரித்த படங்கள், தேவிகா வர முடியாத சூழ்நிலையில் தொடங்கப்பட்ட படங்கள் என்று சொல்வார்கள்.
அந்த அளவிற்கு இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்துள்ளர். குமுதத்தில் இந்த வாரம் சந்தித்தேன் என்று கண்ணதாசன் ஒரு தொடர் எழுதியுள்ளார். அதில் ஒரு அத்தியாயம் முழுவதும் தேவிகாவை பற்றி அவர் எழுதியது குறித்து கேட்டுள்ளனர். மேலும், நீங்கள் தயாரித்த பெரும்பாலான படங்களில் தேவிகா நாயகியாக நடித்தது ஏன் என்று கேட்டதற்கு பதில் அளித்த கண்ணதாசன், எந்த குடை என்னை மழையிலும் வெயிலிலும் காக்கிறதோ அந்த குடையை தான் நான் எப்போதும் பயன்படுத்துவேன்.
தேவிகா இதுவரை என்னிட்டம் தனக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டதில்லை. படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததில்லை. பணம் கொடுத்தால் தான் இன்று நடிப்பேன் என்று சொன்னதில்லை. அவரால் ஒருநாளும் படப்பிடிப்பு தடையானதில்லை. அதேபோல் நான் எதாவது சோகத்தில் இருந்தால், அண்ணனுக்கு என்னஆச்சு இன்னைக்கு முகமெல்லாம் வாடிப்போய் இருக்கிறதே என்று தேவிகா கேட்டால் அப்போதே என் சோகமெல்லாம் மறைந்துவிடும் என்று கண்ணதாசன் பதில் அளித்துள்ளார்.
அதேபோல், தேவிகா பற்றி, தன்னிடம் தவறாக பேசிய ஒரு இயக்குனரை படப்பிடிப்பு தளத்திலேயே திட்டிவிட்டு வந்த கண்ணதாசன், இன்று ஒரு இயக்குனரை நல்ல திட்டி விட்டேன் மா என்று தேவிகாவிடம் சொல்ல, அவர் ஏன்? என்று கேட்க, உன்னை பற்றி என்னிடமே தப்பாக சொல்கிறான். என்னை பற்ற எனக்கு தெரியாதா என்று கேட்டுள்ளார். அந்த அளவிற்கு இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு, அண்ணன் தங்கை என்ற பாசம் அளவில்லாமல் இருந்துள்ளர். நடிகை தேவிகா கரகாட்டக்காரன் படத்தின் நாயகி கனகாவின் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“