காதல் மயக்கத்தில் பெண்... துறவியாக ஆண் : இடையில் நின்ற கண்ணதாசன் என்ன செய்தார்?
கண்ணதாசனின் பாடல்கள் அனைத்தும் அவர் வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதியிருப்பார். அந்த வகையில் தரிசனம் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் பற்றிய தகவல்களை பார்ப்போம்.
தமிழ் திரையுலகில் காலத்தை வென்ற கவிஞர்கள் பட்டியலை எடுத்தக்கொண்டால் அதில் முக்கிய இடம் கவியரசு கண்ணதாசனுக்கு உண்டு. தனது பாடல் வரிகளின் மூலம் வாழ்க்கையின் தத்துவங்களை உணர்த்திய கண்ணதாசன், மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல் மூலம் பதில் கூறியுள்ளார்.எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
Advertisment
கண்ணதாசன், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டனர். பல திறமைகளை உள்ளடக்கி இருந்தாலும் கண்ணதாசன் தனது பாடல்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார். அதேபோல் இவரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்தால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றுவிடும் என்று பேச்சுக்கள் இருந்த காலக்கட்டம் தமிழ் சினிமாவில் இருந்துள்ளது.
அதே போல் கண்ணதாசனின் பாடல்கள் அனைத்தும் அவர் வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதியிருப்பார். அந்த வகையில் தரிசனம் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் பற்றிய தகவல்களை பார்ப்போம். 1970-ம் ஆண்டு வெளியான படம் தரிசனம். ஏவிஎம் ராஜன், புஷ்பலதா இணைந்து நடித்திருந்த இந்த படத்தை வி.டி.அரசு இயக்கியிருந்தார். சூலமங்கலம் ராஜலட்சுமி இந்த படத்திற்க இசையமைத்திருந்தார்.
படத்தின் பாடல்கள் அனைத்தையும் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த படத்தில் வாழ்க்கையை வெறுத்த ஒருவனும் அவனை உருகி காதலிக்கும் காதலியும் இணைந்து பாடுவது போன்ற ஒரு பாடல் தான் ‘’மாலை நேரத்து மயக்கம்’’. இதில் காதல் மற்றும் காமம் மயக்கத்தில் இருக்கும் காதலியாகவும், வாழ்க்கையை வெறுத்த ஒரு காதலனமாகவும் மாறி மாறி பாடலை எழுதியிருப்பார் கண்ணதாசன்.
இதில் காதல் மயக்கத்தில் பாடும் காதலிக்கு எல்.ஆர். ஈஸ்வரியும், துறவியாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்த காதலனுக்கு டி.எம்.சௌந்திரராஜனும் குரல் கொடுத்திருப்பார்கள். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஒரே நேரத்தில் காதல் மயக்கம் உள்ள ஒரு பெண்ணாவும், துறவியாக செல்ல முடிவு செய்த ஒரு ஆணாகவும் யோசித்து பாடல்களை கொடுத்த கண்ணதாசன் இன்னும் போற்றப்படும் கவிஞர்களில் முக்கியமானவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“