Advertisment

பெல்ஸ் ரோடு, மெரினாவில் உலவிய கவிஞர்: கண்ணதாசன் வாழ்வில் வந்த ராணி மேரி கல்லூரி மாணவி

திருச்சியிலும் சென்னையிலும் தனது எழுத்துப்பணிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் வேறு எதாவது வேலை தேடலாம் என்று முடிவு செய்துள்ளார்

author-image
WebDesk
New Update
Kannadasan Early life

கவியரசு கண்ணதாசன்

தமிழ் சினிமாவில் இன்றைய காலக்கட்டத்திலும் கொண்டாடப்படும் ஒரு கவிஞராக இருக்கும் கண்ணதாசன் வாழ்க்கயைில் எழுத்தாளராக தனக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் முடி திருத்தும் கடைக்கு வேலைக்கு சென்ற சம்பவம் கூட நடந்துள்ளது.

Advertisment

சினிமாவில் பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் கண்ணதாசன். முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட இவர், தனது வாலிப வயதில் எழுத்தாளராக வாய்ப்பு தேடி திருச்சிக்கு வந்துள்ளார், ஆங்கேயும் சரியான வாய்ப்பு இல்லாததால், சென்னை போகலாம் என்று முடிவு செய்துள்ளார். ஆனால் அவரது கையில் 25 பைசா தான் இருந்துள்ளது. அதனால் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

சென்னை வந்த அவருக்கு பிராடவேயில் இங்கி வந்த பத்திரிக்கை அலுவலகத்தின் முகவரி கிடைத்து அங்கு சென்று ஆசிரியரை சந்தித்தள்ளார். அப்போது நான் ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன். அதை உங்களது பத்திரிக்கையில் பிரசங்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவரோ உனக்கு எதுக்குபா இந்த வேண்டாத வேலை எல்லாம். ஒழுங்க நல்ல வேலைக்கு போய் பொழைக்கிற வழிய பாரு என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்.

இதனால் விரக்தியடைந்த கண்ணதாசன் அங்கிருந்து நடந்தே மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். அங்கேயே படுத்து தூங்கிய கண்ணதாசன், திருச்சியிலும் சென்னையிலும் தனது எழுத்துப்பணிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் வேறு எதாவது வேலை தேடலாம் என்று முடிவு செய்து ஒரு ஹொட்டலில் வேலைக்கு முயற்சித்துள்ளார். அந்த ஹோட்டலில் இவர் சாதியை காரணம் காட்டி வேலை இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.

அடுத்து கண்ணதாசன் வேலை தேடி போனது ஒரு முடி திருத்தும் கடைக்கு. இதில் முன் அனுபவம் இல்லை என்றாலும் பழகிக்கொள்ளலாம் என்று சென்றுள்ளார். ஆனால் அங்கேயும் கண்ணதாசனுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் சோகத்துடன் திருவல்லிக்கேணி பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்தபோது பட்டாளத்திற்கு துணி தைத்துக் கொடுக்கும் தனது நண்பரை சந்திகிறார் கண்ணாதாசன். இந்த சந்திக்கு அவருக்கு சிறிது சம்பளம் 3 வேளை சாப்பாட்டுக்கு வழி செய்கிறது.

அங்கிருந்துகொண்டு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கிக்கொண்டு வரும் வேலை பார்த்து வந்த கண்ணதாசன் கிடைக்கும் பணத்தில் சினிமா பார்க்க தொடங்கினார். சினிமா பார்த்து பார்த்து தான் ஏன் நடிகன் ஆக கூடாது என்று யோசித்த கண்ணதாசன், தனது இயற்பெயரான முத்தையா என்ற பெயரை சந்திரமோகன் என்று மாற்றிக்கொண்டார். ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் முதலில் தொடங்கிய பிரகதி ஸ்டூடியோவில் நடிக்க வாய்ப்பு கேட்டு கடிதம் எழுதுகிறார் கண்ணதாசன்.

இந்த கடிதத்திற்கு இங்கு இதுவும் வேலை காலி இல்லை என்று உடனடியாக பதில் வருகிறது. இதனால் எழுத்தளராக வேண்டும் என்று சபதம் எடுத்திருந்த கண்ணதாசன் இதன் மூலம் நடிராக வேண்டுமு் என்ற மற்றொரு சபதத்தையும் எடுத்துக்கொண்டார். அதன்பிறகு ஒருநாள் திருவல்லிகேணி போவதற்காக ட்ராம் வண்டியிலி ஏறிய கண்ணதாசனுக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் படிக்கும் எமிலி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் மெரினா கடற்கரையில் பலமணி நேரங்கள் தினமும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

எமிலியின் சொந்த சகோதரன் கண்ணதாசன் போல் இருந்துள்ளார். ஆனால் அவர் இறந்துவிட்டதால் தனது சகோதரனை போல் இருக்கும் கண்ணதாசனிடம் நெருங்கி பழகியுள்ளார். கண்ணதாசனை காதலிப்பதாக எமிலியின் தோழிகள் நினைத்ததனர். ஆனால் எமிலி தனது தோழிகளுக்கு உண்மையை சொல்லி கண்ணதாசனுக்கு அவர்களை அறிமுகமும் செய்து வைத்தார். அதன்பிறகு எலிமி மற்றும் அவரது தோழிகள் அனைவருடனும் கண்ணதாசன் மெரினா கடற்கரையில் பொழுதை கழித்தார்.

அதன்பிறகு அஜாக்சிங் என்ற இரும்பு பெட்டி தயாரிக்கும் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த கண்ணதாசன் வரம் ஒருமுறை எமிலியை சந்தித்து வந்தார். அந்த தொழிற்சாலை திருவெற்றியூரில் அமைந்திருந்ததால், சென்னைக்கு வரும்போது தனது முதலாளியை சந்தித்து தன்னை சென்னைக்கு மாற்றிவிடுமாறு கேட்டுவிட்டு செல்வது கண்ணதாசனின் வழக்கம். அப்படி ஒருநாள் கேட்கும்போது அந்த முதலாளி நீ இனிமேல வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.

வேலை போய்விட்டதை தொடர்ந்து எமிலியும் கண்ணதாசனிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்னையில் இருந்து ஊருக்கு சென்றுவிட்டார். எமிலி சென்னையில் இல்லை என்று தெரிந்த கண்ணதாசன் அந்த பாதிப்பில் இருந்து மீண்டுவர பல நாட்கள் ஆனது. அடுத்த சில மாதங்களில் தன்னால் ஏன் ஒரு எழுத்தாளராக வர முடியவில்லை என்று சிந்தித்த கண்ணதாசன், எழுத்தாளராக மாற வேண்டும் என்பதற்காக தனது அடுத்து பயணத்தை தொங்கியுள்ளார். இப்போது அவரது பாடல்கள் பட்டிதொட்டி எங்கிலுமு் ஒளித்துக்கொண்டிருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment