உண்மையான வரலாற்று நிகழ்வை படமாக்க முடிவு செய்த இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், இந்த படத்திற்கு கண்ணதாசன் பாடல் எழுத வேண்டாம் என்று முடிவு செய்திருந்தாலும், கடைசியில் கண்ணதாசன் இல்லாமல் அந்த படத்தை அவரால் முடிக்க முடியாமல் போனது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
தமிழ் சினிமாவில் இயக்குனர் திலகம் என்று அழைக்கப்படும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் 1971-ம் ஆண்டு அபிராமி பட்டரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவு செய்கிறார். இந்த படத்தில், ஜெமினி கணேசன், ஜெயலலிதா, பத்மினி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், கே.வி.மகாதேவன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் அபிராமியே தனது தெய்வம் என்று இருக்கும் அபிராமி பட்டர், ஒருநாள் கோவலில் மன்னர் வருவதற்காக ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போது, அபிராமி பட்டர் உள்ளே வருகிறார். அவர் அபிராமியை நினைத்து மெய்மறந்து தியானத்தில் இருக்கும்போது, மன்னர் அவரை பரிசோதனை செய்ய, இன்றைக்கு திதி என்ன என்று கேட்க, இவர் பௌனர்மி திதி என்று சொல்லிவிடுகிறார்.
அங்கிருப்பவர்கள் இவர் ஒரு ஞானி, கோவிலில் அமர்ந்து பஞ்சாங்கம் கணிப்பவர் என்று சொன்னாலும், அதை நம்பாத மன்னர் அவரிடம் கேட்டபோது, இன்றைக்கு பௌர்னமி திதி என்றால் நிலவு வருமா என்று கேட்க, பௌர்னமி திதி என்றால் முழு நிலா வரும் என்று சொல்லிவிட, கோபமான மன்னர், இன்று அமாவாசை, ஆனால் மாலையில் முழு நிலவு வரவில்லை என்றால் இவரை அக்னியில் இறக்கிவிடுவேன் என்று சொல்லிவிடுகிறார்.
தியானத்தில் இருக்கும்போது என்ன நடந்துத என்று தெரியாத அபிராமி பட்டர், என்னிடம் ஒருவர் எதோ கேட்டார். நான் எதோ சொன்னேன். என்ன சொன்னேன் என்று தெரியவில்லை. ஆனாலும் அபிராமி நான் சொன்னது உன் வார்த்தைகள் நீதான் அதற்கு பொறுப்பு என்று சொல்லி, தெய்வத்தை நினைத்து பாடுவது போன்ற ஒரு பாடல். இந்த பாடலுக்கு அபிராமியின் உண்மையாக பாடலை எடுத்து பயன்படுத்த இயக்குனர் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, அந்த பாடலை திரைப்படத்திற்கு ஏற்றதுபோல் மாற்றி இசையமைத்தபோது, அந்த பாடல் அவ்வளவு பக்தியாக திருப்திகரமான பாடலாக இல்லை. இதனால் இந்த பாடலை பிடிக்காத இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், வேறு வழியில்லை. கூப்பிடுங்கள் கண்ணதாசனை என்று அழைத்து பாடலை எழுதுமாறு கூறியுள்ளார். இந்த பாடல் தான் ‘’மணியே மணியின் ஒளியே’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்றைய பல படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“