நட்புக்கு செய்த உதவி... சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர் : கண்ணதாசன் செய்த விநோதம்!

நெருங்கிய நட்பு காரணமாக பல்லவி மட்டும் எழுதியதற்காக தனக்கு கொடுத்த சம்பளத்தை தயாரிப்பாளரிமே திருப்பி கொடுக்க புதிய யுக்தியை கையாண்டுள்ளார் கண்ணதாசன்

நெருங்கிய நட்பு காரணமாக பல்லவி மட்டும் எழுதியதற்காக தனக்கு கொடுத்த சம்பளத்தை தயாரிப்பாளரிமே திருப்பி கொடுக்க புதிய யுக்தியை கையாண்டுள்ளார் கண்ணதாசன்

author-image
WebDesk
New Update
Kannadasan MSV Manithan

கவியரசர் கண்ணதாசன்

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ஒரு படத்தின் பாடலுக்கு 2 வரிகள் பல்லவி எழுதியதற்காக படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த சம்பளத்தை கண்ணதாசன் வாங்க மறுத்தாலும் அவரின் வற்புறுத்தலால் வாங்கிக்கொண்டு இறுதியாக அதை அவரிடமே கொடுக்க தனக்கு வராத ஒரு செயலை செய்துள்ளார்.

Advertisment

வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை தனது பாடல் வரிகள் மூலம் சொல்லிக்கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் கவியரசர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த் கமல்ஹாசன் என பலருக்கும் தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ள கண்ணதாசன் பெரும்பாலான பாடல்களை தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வைத்து எழுதியுள்ளார்.

அதேபோல் தனது பாடல்கள் மட்டுமல்லாமல்மற்ற கவிஞர்களின் பாடல்களையும் ரசிக்கும் மனம் கொண்ட கண்ணதாசன்வாலி எழுதிய ஒரு பாடலை கேட்டுவிட்டு அவரை பாராட்டிநான் இறந்தால் நீதான் கவி பாட வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி கண்ணதாசன் இறந்த 3-வது நாள் அவருக்கான கவிஞர் வாலி கவிதை பாடியுள்ளார்.அதேபோல் தனக்கு நெருக்கமானவர்களிடம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்பவர் தான் கண்ணதாசன்.

அந்த வகையில், ஒரு தயாரிப்பாளருக்கு ஒரு பாடலின் பல்லவி மட்டும் எழுதி கொடுத்துள்ளார். கண்ணதாசன் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு, ஒரு பத்திரிக்கையில் வேலை செய்து வந்தார். அந்த பத்திரிக்கையில் அக்கவுண்டன்டாக வேலை பார்த்தவர் வலம்புரி சோமநாதன். பின்னாளில் தயாரிப்பாளர் இயக்குனர் கதாசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வந்த இவர், ஒரு படத்தை தயாரிக்க முயற்சி செய்கிறார்.

Advertisment
Advertisements

இந்த படத்திற்கு ஒரு கவிஞரை வைத்து பாடல்கள் எழுத, அவர் எழுதிய ஒரு பாடலில் பல்லவி மட்டும் இவருக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. அதை அந்த கவிஞரிடம் சொல்ல, அவரும் மாற்றி தருவதாக கூறியுள்ளார். ஆனாலும் அவர் தடுமாறுவதை புரிந்துகொண்ட வலம்புரி சோமநாதன், கவியரசர் கண்ணதாசனிடம் உதவி கேட்க, அந்த பாடலின் டியூனை கேட்டு, கண்ணதாசன் பாடலுக்கான பல்லிவியை மட்டும் எழுதி கொடுத்துள்ளார்.

அதன்பிறகு ஒரு சில வாரம் கழித்து தனது அலுவலகத்திற்கு வந்த கண்ணதாசனுக்கு, வலம்புரி சோமநாதன் அனைத்து பாடல்களையுளும் போட்டு காட்டியுள்ளார். அதனை கேட்ட கண்ணதாசன் வீட்டுக்கு கிளம்பும்போது, ஒரு கவரை கொடுத்துள்ளார். அதில் ரூ200 இருந்துள்ளது. என்ன இது என்று கேட்டபோது, பாடலின் பல்லவி எழுதியதற்காக சம்பளம் என்று வலம்புரி சோமநாதன், சொல்ல, கண்ணதாசன் வேண்டாம் என்று கூறி திருப்பி கொடுத்துள்ளார்.

கண்ணதாசன் திருப்பி கொடுத்தாலும் அதை வலம்புரி சோமநாதன் வாங்க மறுத்த நிலையில், அதனை வைத்துக்கொண்ட கண்ணதாசன், அங்கு சீட்டுக்கட்டு இருப்பதை பார்த்து, வா சீட்டு விளையாடலாம் என்று சொல்ல, வலம்புரி சோமநாதன் – கண்ணதாசன் இருவரும் சீட்டு விளையாடியுள்ளனர். சரியாக சீட்டு விளையாட தெரியாத கண்ணதாசன், ரூ200 படத்தை விட்டபின் போதும் என்று ஆட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

அதன்பிறகு காரில் வரும்போது கண்ணதாசனின் உதவியாளர் உங்களுக்கு சீட்டு விளையாட வராது அப்புறம் எதற்காக விளையாடுனீங்க என்று கேட்க, பல்லவி எழுதியதற்காக ரூ200 கொடுத்தார் அல்லவா, அதை திருப்பி கொடுத்தால் வாங்க மாட்டார். அதற்காகத்தான் இப்படி செய்து இந்த வழியில் அதனை திருப்பி கொடுத்தேன் என்று கூறியுள்ளார் கண்ணதாசன். என்ன ஒரு மாண்பு கவியரசர் கண்ணதாசனுக்கு!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Kannadasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: