சிவாஜி நடிப்பில் வரலாற்று படங்களை இயக்கி வெற்றி கண்ட, பி.ஆர்.பந்தலு, இயக்கத்தில் வெளியான கர்ணன் படம் இன்றும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் 4 மணி நேரம் சொல்ல வேண்டிய கதையை, 4 நிமிட பாடலில் சொல்வதற்காக கவியரசர் கண்ணதாசன அனுக்கியுள்ளார் பந்தலு. அது என்ன பாடல்?
Advertisment
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி – கவியரசர் கண்ணதாசன் கூட்டணிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இன்றும் இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இவர்கள் காம்போவில் வெளியான பல படங்கள் பாடல்களுக்காகவே வெற்றியை பெற்றுள்ளன. அந்த வகையில் வெளியான ஒரு படம்தான் கர்ணன்.
1964-ம் ஆண்டு பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் வெளியான படம் கர்ணன். மகாபரத போரை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், சாவித்ரி, தேவிகா, அசோகன் முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்த இந்த படத்தில் 17 பாடல்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
இந்த படத்தை இயக்கிய இயக்குனர் பி.ஆர்.பந்தலுவே படத்தின் தயாரிப்பாளர். தான் சுந்திரமாக படத்தை இயக்க வேண்டும் என்பதால் தயாரிப்பளராகவும் இருந்த பி.ஆர்.பந்தலு, கர்ணன் படத்தை இயக்க முடிவு செய்தபோது, படம் வட நாட்டில் நடக்கும் கதை என்பதால், வட நாட்டு இசையை கொண்டு வர வேண்டும் என்று நினைத்துள்ளார். அதன்படி படப்பிடிப்பை நடத்தி அசத்தியுள்ளார். ஆனால், படத்தின் கிளைக்கதைகள் அதிகமாக இருந்ததால், படத்தின் நீளம் அதிகமாக இருந்துள்ளது.
Advertisment
Advertisements
இதன் காரணமாக படத்தின் நீளத்தை கருத்தில்கொண்டு, படத்தின் கிளைக்கதைகளை ஒரு 4 நிமிட பாடலில் சொல்லிவிடலாம் என்று யோசித்து, கண்ணதாசனிடம் கூறியுள்ளனர். இந்த பாடல் பகவத் கீதையை சுருக்கி பாடலாக கொண்டுவர வேண்டும் என்று சொல்ல, கண்ணதாசன் அதற்கு தயாராகியுள்ளார். படக்குழுவினர் இவர் 4-5 நாட்கள் டைம் கேட்பார் என்று நினைத்துக்கொண்டிருக்க, சில மணி நேரங்களில், கண்ணதாசன் அந்த பாடலை எழுதி முடித்துள்ளார்.
அந்த பாடல் தான் மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா என்ற பாடல். சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்த பாடல், அந்த காலக்கட்டத்தில் மட்டுமல்லாமல் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், பகவத் கீதை என்ற ஒரு புத்தகத்தின் கருத்துக்களை 3 நிமிட பாடலில் கொடுத்த கண்ணதாசனின் புலமையை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“