தமிழ் சினிமாவில் கவிஞர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முக திறமையுடன் இருந்த கண்ணதாசனை சிறந்த பேச்சாளராக மாற்றியவர் தான் கலைஞர் மு.கருணாநிதி. ஒரு கட்டத்தில் இவர்களுக்கு இடையே மோதல் வெடித்து கண்ணதாசன் கருணாநிதியை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளார்.
மந்திரி குமாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் கருணாநிதி. மாடர்ன் தியேட்டர்ஸ தயாரித்த இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி, கண்ணதாசனை கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதற்கு முன்பே கருணாநிதியின் எழுத்துக்களுக்கு ரசிகராக இருந்த கண்ணதாசன், முதல் சந்திப்பில் கருணாநிதியுடன் பெருமையாக பேசியுள்ளார்.
அந்த காலக்கட்டத்தில் சில பாடல்கள் மட்டுமே எழுதியிருந்தாலும், முதல் சந்திப்பிலேயே கண்ணதாசனை கவிஞர் என்று பெயரிட்டு அழைத்துள்ளார் கருணாநிதி. இந்த நேரத்தில் இவர்களுக்கு இடையே ஒருவான இந்த நட்பு மிகவும் ஆழமாக தொடர்ந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் கண்ணதாசன் எதை எழுதினாலும், அதை கருணாநிதிக்கும், கருணாநிதி எதை எழுதினாலும் அதை கண்ணதாசனுக்கும் கொடுத்து படித்து பார்க்க சொல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
1953-ம் ஆண்டு கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்ற கருணாநிதி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த போராட்டத்தில் பங்கேற்ற கண்ணதாசனும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த அவர், மாடர்ன் தியேட்டர்ஸில் இல்லற ஜோதி என்ற திரைப்படத்திற்கு கதை வசனம் எழுத தொடங்கியுள்ளார். எப்போதும் தான் எழுதியதை கருணாநிதியிடம் காட்டு வதை வழக்கமாக வைத்திருந்த கண்ணதாசன், இல்லற ஜோதி படத்தின் வசனத்தை அவரிடம் காட்ட திருச்சிக்கு விரைந்துள்ளார்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாநிதிக்கு தனது வசனங்கள் அடங்கிய தொகுப்பை அனுப்பியுள்ளார். அதற்குள் கருணாநிதியுடன் சிறையில் இருந்த அவரது நண்பர்கள், பார்த்தீங்களா நீங்கள் சிறையில் இருக்கும் சயமத்தில் கண்ணதாசன் வசனங்கள் எழுத தொடங்கிவிட்டார் என்று சொல்ல, கண்ணதாசனின் வசனங்கள் அடங்கிய தொகுப்பில் ஒரு வார்த்தை கூட படிக்காமல் அதை திருப்பி அனுப்பியுள்ளார் கருணாநிதி. இங்கு தான் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளனர். அதன்பிறகு கருணாநிதியை கண்ணதாசன் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளார்.
கண்ணதாசனின் விமர்சனங்கள் அனைத்திற்கும் கருணநிதியும் பதில் அளித்து வந்துள்ளார். கருணநிதியை எவ்வளவு விமர்சித்தாலும், அவ்வப்போது அவருடன் நட்பாக இருந்த காலக்கட்டம் குறித்து பத்திரிக்கை பேட்டிகளில் கண்ணதாசன் பதிவு செய்துள்ளார் என்று பத்திரிக்கையளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“