கண்ணதாசனுக்கு அவப்பெயர்... ஆனால் பாடல் பெரிய ஹிட் : எந்த படத்தில் தெரியுமா?
மனித வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளையும் பாடலாக வெளிப்படுத்தியுள்ள கண்ணதாசனின் வரிகள் அனைவருக்கும் ஆறுதலாகவும், மகிழ்ச்சியில் உள்ள பலருக்கும் மேலும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் உள்ளது.
க்ளாசிக் தமிழ் சினிமாவில் தனது கவித்துவத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த கவியரசர் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் அவருக்கே அவப்பெயரை பெற்று தந்தது என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவல்.
Advertisment
சினிமா பாடல்கள் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட முக்கிய கவிஞர் கண்ணதாசன். சாதாரணமாக இல்லாமல் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் கஷ்டங்கள், மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன், இயக்குனர் தயாரிப்பாளர், கதாசிரியர், உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கி இருந்தார்.
அதேபோல் மனித வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளையும் பாடலாக வெளிப்படுத்தியுள்ள கண்ணதாசனின் வரிகள் விரக்தியில் உள்ள அனைவருக்கும் ஆறுதலாகவும், மகிழ்ச்சியில் உள்ள பலருக்கும் மேலும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் உள்ளது. அதேபோல் க்ளாசிக் சினிமாவை எடுத்துக்கொண்டால் கண்ணதாசனின் பாடல்கள் தனி இடம் பிடித்திருக்கும் என்ற நிலை இன்றளவும் உள்ளது.
பாடல், கட்டுரை, கதை, திரைக்கதை, படம் இயக்குவது, தயாரிப்பாளர் என பன்முறை திறமை கொண்ட கவியரசர் கண்ணதாசன், தனது வரிகள் மூலம் பலரின் சோகங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் என்று சொல்லலாம். அப்படி மனித உணர்வுகளை வைத்து பாடல்கள எழுதிய கண்ணதாசன், எழுதிய ஒரு குத்து பாட்டு அவரின் திரை வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாக மாறியுள்ளது என்று சொல்லலாம்.
கடந்த 1968-ம் ஆண்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கததில் வெளியான படம் பணமா? பாசமா?. ஜெமினி கணேசன், பி.சரோஜா, நாகேஷ், சிவக்குமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கர்நாடக சங்கீதத்தில் பெயர் பெற்ற, கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
இந்த படத்தில், இடம்பெற்ற ‘’எலந்த பழம்’’ என்ற அந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் ஒரு பாடலாக உள்ளது. எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய இந்த பாடல், எலந்த பழம் பற்றிய பாடலாக இருந்தாலும், பாடலுக்கு இடையில், வரும் வரிகள் இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும். அதை உறுதி செய்யும் விதமாக இந்த பாடலுக்கு நடனமாடிய விஜய நிர்மலாவின் நடன அசைவும் இருந்துள்ளது.
என் எழுத்துப்பயணத்தில் இந்த பாடல் எழுதியதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கண்ணதாசனே கூறியுள்ளார். இந்த பாடல் குறித்து பலரும் விமர்சனங்களை கொடுத்த நிலையில்,கண்ணதாசன் சமூகத்தை சீரழித்துவிட்டார் என்றும் பலரும் திட்டி தீர்த்தனர். நடிக்க தெரியாத நடிகை, எலந்தபழம் போன்ற பாடல் இருக்கும் வரை தமிழ் சினிமாவை திருத்த முடியாது என்று கண்ணதாசனே கூறியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளது.
இந்த படத்தின் வெற்றிக்கு திரைக்கதை ஒரு காரணமாக இருந்தாலும், இந்த பாடல் மற்றொரு காரணமாக இருந்துள்ளது. அதேபோல், அன்றைய காலக்கட்டத்தில் இந்த பாடலுக்கான கேசட்டை வாங்குவதற்ககா கடும் போட்டி இருந்ததாகவும். இன்று பதிவு செய்தால் ஒரு வாரத்திற்கு பிறகு தான் பாடலுக்கான கேசட் கிடைக்கும் என்ற நிலையும் இருந்துள்ளது. இந்த பாடல் இன்றளவும் ரசிகர்கள் வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“