தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் உச்சம் தொட்டவர் கவியரசர் கண்ணதாசன். மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்துள்ள கண்ணதாசன், எம்.ஜி.ஆர், சிவாஜி, தொடங்கி ரஜினிகாந்த் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். பாடல்கள் மட்டுமல்லாமல், தயாரிப்பு, இயக்கம் என சினிமாவில் முக்கிய பங்காற்றியவர் தான் கண்ணதாசன்.
Advertisment
முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வந்த அவருக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்து, அதன்பிறகு அதிலே தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அதே சமயம் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமான கண்ணதாசன், ஒரு சில படங்களில் சிறப்பு தொற்றத்தில் நடித்துள்ள நிலையில், சிவாஜி, சாவித்ரி இணைந்து நடித்த ரத்த திலகம் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றியிருப்பார்.
தான் தயாரிக்கும் படங்கள் மட்டுமல்லாமல், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பல பாடல்களை உருவாக்கி ஹிட் கொடுத்துள்ள கண்ணதாசன், தனது முதல் காதலியின் நினைவாக 2 படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். பருவ வயதில் சொந்த ஊரில் இருந்த கண்ணதாசனுக்கு, ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு சென்ற கண்ணதாசனின் நண்பர், உன் காதலி, மகிழ்ச்சியுடன் தாலியை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் சோகமானத்தான் இருந்தார் என்று சொல்ல, கண்ணதாசனுக்கு அந்த பெண் மீது மேலும் காதல் அதிகரித்துள்ளது. காலப்போக்கில் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த கண்ணதாசன், தனது முதல் காதலியின் நினைவாக பாடல்களை எழுதியுள்ளார். அதற்கு முன்பாகவே காதலியை நினைத்து கவிதையாக சிலவற்றை எழுதியுள்ளார்.
Advertisment
Advertisement
1962-ம் ஆண்டு பி.எஸ்.ரங்கா இயக்கத்தில் வெளியான படம் நிச்சய தாம்பூலம். சிவாஜி கணேசன், ஜமுனா, நம்பியார் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் –ராமமூர்த்தி இசையமைத்திருந்த நிலையில், கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். இந்த படத்தில் வரும் ‘’பாவாடை தாவணியில் பார்த்த உருவமா’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை கண்ணதாசன் தனது முதல் காதலியின் நினைவாகவும், அடுத்த பிறவி எடுத்தாவது உன் கழுத்தில் மாலையிடுவேன் என்று பாடல் வரிகளை பயன்படுத்தியிருப்பார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“