தமிழ் சினிமாவில் தனது மெல்லிசையினால் பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம.ஜி.ஆர் தொடங்கி சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு தனது இசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த எம்.எஸ்.வி தொடக்கத்தின் டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்து வந்தார்.
Advertisment
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவருமே சி.ஆர்.சுப்புராமன் என்ற இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்தவர்கள். ஒரு கட்டத்தில் சி.ஆர்,சுப்புராமன் திடீரென இறந்துவிடுவதால், அவர் இசையமைப்பதாக ஒப்புக்கொண்ட படங்கள் பாதியில் நிற்கிறது. இந்த படங்களுக்கு நாங்கள் இசைமைக்கிறோம். எங்கள் குரு படங்களை நாங்கள் முடிக்கிறோம் என்று கூறி விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் இசையமைத்து வெற்றிகளை குவிக்கின்றனர்.
குருவின் படங்களை முடித்துவிட்டாலும், இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்த போது, 1964-ம் ஆண்டு வெளியாக காமெடி படமான காதலிக்க நேரமில்லை படத்தை முடித்த ஸ்ரீதர் அடுத்து என்ன படம் எடுக்கலாம் என்று யோசனையில் இரக்க கலை கோயில் என்ற படம் எடுக்க முடிவாகிறது. இந்த படத்தின் கதையை கேட்ட எம்.எஸ்.வி மிகவும் பிடித்துபோய் நானே தயாரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
எம்.எஸ்.வியின் இந்த செயல் ராமமூர்த்திக்கு பிடிக்கவில்லை. அங்கிருந்து இவர்கள் விரிசல் ஆரம்பமாகிறது. நமக்கு இசை மட்டும் தான் தெரியும் படம் எடுக்க தெரியாது வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனாலும் கதையின் மீதுள்ள நம்பிக்கையில், வேறு ஒருவருடன் கூட்டு சேர்ந்து கடன் வாங்கி இந்த படத்தை எடுக்கிறார் எம்.எஸ்.வி. மேலும் கடனுக்கு ராமமூர்த்தியும் பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று சொல்ல, வேண்டா வெறுப்பாக எம்.எஸ்.வியின் வற்புறுத்தலால் கையெடுத்து போடுகிறார் ராமமூர்த்தி.
Advertisment
Advertisements
கலை கோயில் படம் வெளியாகி படு தோல்வியை சந்தித்தால், சுமார் 15 லட்சத்திற்கு மேல் எம்.எஸ்.விக்கு கடன் வந்துவிடுகிறது. கையெழுத்து போட்டதால் தனக்கும் இந்த கடன் வந்துவிட்டதே இதில் இருந்து என்னை விடுவித்துவிடுங்கள் என்று டி.கே.ராமமூர்த்தி சொல்ல, அப்போது இருவருக்கும் நெருக்கமான கண்ணதாசன் கடன்காரர்களை அழைத்து ராமமூர்த்தி பெயரில் இருக்குமு் கடனை நான் அடைக்கிறேன் என்று சொல்லி அவரை விடுவிக்கிறார்.
இசையமைக்கும்போது சந்தோஷமாக இருக்கும்போது என் அருகில் இருந்த நீங்கள் இப்போது கஷ்டகாலத்தில் விட்டு விட்டு போறீங்களே என்று விஸ்வநாதன் நினைக்க, நான் சொல்ல சொல்ல கேட்காமல் படம் எடுத்து இப்படி என்னையும் மாட்டி விட்டுட்டியே என்று ராமமூர்த்தி ஒரு பக்கம் நினைக்கிறார். ஆனாலும் பிரிந்து போக முடிவு செய்ததால், அதற்கு முன்பாக கமிட் செய்த படங்களுக்கு இருவரும் இணைந்து இசைமைக்க வருகின்றனர்.
இந்த சூழலலில் ஆனந்த ஜோதி என்ற படத்திற்கு இசையமைக்கும்போது ஒரு பாடல் எழுத கண்ணதாசன் வரவழைக்கப்பட்டு அவரிடம் படத்தின் சூழ்நிலை சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆர் நாயகனாக இந்த படத்தில் நாயகன் தனது காதலியை பிரிந்து போகிறார். ஆனால் மறக்க முடியாமல் காதலி பாடுவது போன்ற பாடல் என்று சொல்ல, விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் அதே நிலையில் தான் இருப்பதை பார்த்த கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி கொடுக்கிறார்.
அந்த பாடல் தான் ‘’நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா, பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா’’ இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. இந்த பாடலுக்கு கனத்தை இதயத்துடன் இசையமைத்த விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் அதன்பிறகு பிரிந்துவிட்டனர். ஆனால் அந்த பாடல் இன்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளர். துரை சரவணன் என்ற யூடியூப் சேனலில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“