Advertisment
Presenting Partner
Desktop GIF

சூப்பரான பாட்டு கொடுத்த கண்ணதாசன்; சிவாஜிக்கு வந்த பெரும் கோபம்

எம்.எஸ்.வி இசையில் டி.எம்.எஸ் குரலில் கண்ணதாசனின் ஆழமான வரிகளில் அமைந்த ஒரு பாடலை சிவாஜி படக்குழு சரியாக படமாக்கவில்லை என்று சிவாஜியே கோபமடைந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Kannadasan Sivaji

சிவாஜி கணேசன் - கண்ணதாசன்

தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலை கழகம் என்று போற்றப்படும் நடிகர் சிவாஜி கணேசன். படத்தில் வரும் கேரக்டராக நடிக்காமல் அந்த கேரக்டராகவே மாறி விடும் குணாதிசயம் கொண்ட சிவாஜி, பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். இன்றைய டிஜிட்டல் சினிமா நடிகர்களும் தற்போது சிவாஜியின் நடிப்பை தான் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு நடிக்கிறார்கள் என்று சொல்லலாம்.

Advertisment

1950-களில தொடங்கி 5 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி கணேசன் தனது படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலுக்காக கடுமையாக கோபமடைந்த சம்பவமும் நடந்துள்ளது. 1977-ம் ஆண்டு கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளியான படம் அவன் ஒரு சரித்திரம். சிவாஜி மஞ்சுளா காஞ்சனா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, 5 பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிவாஜி மஞ்சுளா இணைந்து பாடும் அம்மானை அழகு மிகும் என்ற பாடல் இலக்கிய நடையுடன் அமைந்திருந்ததால் பாடலாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. படத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவாஜியை பணி செய்ய விடாமல் உள்ளூர் பணக்காரர்கள் தடுக்கும்போது தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பத்திரிக்கை தொடங்குவார் சிவாஜி.

அதன்பிறகு அந்த எதிரிகளுக்கு சிவாஜி என்ன பதிலடி கொடுத்தார் என்பது தான் படத்தின் கதை. இதில் சிவாஜி மஞ்சுளா இருவருக்கும் இடையே ரொமான்டிக் பாடல் ஒன்று வேண்டும் என்று சுட்சிவேஷன் சொன்னதை தொடர்ந்து கண்ணதாசன் எழுதிய பாடல் தான் அம்மானை அழகு மிகும் என்ற பாடல். இலக்கிய நயத்துடன் இருந்த அந்த பாடல் அனைவருக்குமே பிடித்திருந்த நிலையில், பாடல் பதிவும் நடைபெற்றுள்ளது.

டி.எம்.சௌந்தரராஜன் வாணி ஜெயராம் ஆகியோர் இணைந்து பாடிய இந்த பாடல்படக்குழு அனைவருக்கும் பிடித்திருந்த நிலையில், பாடலும் நன்றாக வந்துவிட்டது. பாடலுக்கான இசையும் நன்றாக உள்ளது. ஆனால் இந்த ஆழமான பாடலை எப்படி படமாக்குவது என்று தெரியாமல் இயக்குனர் பிரகாஷ்ராவ் தனது குழுவுடன் 3 நாட்கள் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனாலும் அவருக்கு எந்த ஐடியாவும் கிடைக்கவில்லை என்பதால் படத்தை முடிக்க வேண்டும் என்ற நிலையில் ஷூட்டிங் கிளம்பியுள்ளார்.

அப்போது சிவாஜி என்னப்பா எல்லாம் ஓகே தானே என்று கேட்க அதெல்லாம் எடுத்துவிடலாம் என்று அரைமனதுடன் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இதை கேட்ட சிவாஜி, என்னப்பா கண்ணதாசன் அவ்வளர் ஆழமா பாட்டு எழுதியிருக்காரு. எம்.எஸ்.வி சிறப்பா இசையமைச்சிருக்கார் பாடகர்களும் நல்ல பாடியிருககாங்க. இந்த பாட்டை எப்படி ஷூட் பண்ணலாம். சாதாரணமாக பண்ணிக்கலாம்னு சொல்றீங்களே என்று கேட்டுள்ளார்.

அதன்பிற்கு படத்தை முடிக்க வேண்டும் என்பதால் அவசரகதியில் பார்க் மற்றும் டேமில் வைத்து பாடலை படமாக்கி முடித்து்ளளனர். சிவாஜி படக்குழுவினரை கடுமையாக கோபித்துக்கொண்டுள்ளார். படம் வெளியான பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த பாடல் திரையில் வரும்போது பலரும் வெளியில் எழுந்து சென்றுவிட்டதாகவும் அப்போது தான் சிவாஜி எதற்காக கோபப்பட்டார் என்பது இயக்குனர் மற்றும் படக்குழுவுக்கு தெரிந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivaji Ganesan Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment