கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி கொடுக்க 20 நாட்கள் அலைவிட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான பி.எஸ்.வீரப்பா, கோபத்தில் சொன்ன ஒரு வார்த்தையை பல்லவியாக மாற்றி கண்ணதாசன் அந்த பாடலை ஹிட்டாக்கியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பல படங்களை கொடுத்தவர் பி.எஸ்.வீரப்பா. எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களைய தயாரித்துள்ள பி.எஸ்.வீரப்பா இவர்களுடன் இணைந்து வில்லனாகவும் நடித்துள்ளார். அந்த வகையில் இவரது தயாரிப்பில் கடந்த 1962-ம் ஆண்டு வெளியான படம் ஆலயமணி.
சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜா தேவி, விஜயகுமாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். இந்த படத்தில் நண்பருக்காக எஸ்.எஸ்.ஆர் தனது காதலை தியாகம் செய்து சிவாஜி – சரோஜா தேவி இருவருக்கும் திருமணத்திற்கு வழி விடுவார். ஆனால் சில நாட்கள் கழித்து சிவாஜிக்கு இவர்கள் காதல் விவகாரம் தெரியவரும்.
அப்போது எஸ்.எஸ்.ஆரை கொலை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்வார். இந்த முயற்சியில் தப்பிக்கும் எஸ்.எஸ்.ஆர் நான் தான் அவரை காதலித்தேன், ஆனால் அவர் உங்களைத்தான் காதலித்தார் என்று உண்மையை சொல்லிவிடுவார். இதனால் தனது தவறை உணர்ந்த சிவாஜி தனது நண்பனையே கொலை செய்ய துணிந்துவிட்டோமே என்ற குற்றஉணர்ச்சியில் மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பார். அவரை ஒரு மீனவன் காப்பாற்றிவிடுவார்.
Advertisment
Advertisements
அதன்பிறகு தனது உடல்நிலை சரியான சிவாஜி தனது சொத்தக்களை மறந்து அந்த குடிசை வீட்டிலேயே தங்கிவிடுவார். அப்போது அவர் தனது தவறை உணர்ந்து பாடுவது போல் ஒரு பாட்டு தேவை என்று கண்ணதாசனிடம் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒரு பாட்டை அவர் எழுதி கொடுத்தால் படம் முடிந்துவிடும் என்ற நிலையில், அரசியலில் கண்ண்தாசன் அப்போது ஈடுபட்டுடன் இருந்ததால் இந்த பாடலை நினைத்து நேரத்தில் எழுத முடியா நிலை ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கோபமான அப்படத்தின் தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பா கண்ணதாசனின் வீட்டுக்கே சென்று இந்த பாடலை எழுதி வாங்கிக்கொண்டு தான் இங்கிருந்து கிளம்புவேன் என்று சொல்லி அமர்ந்துள்ளார். என்ன கவிஞரே ஒரு பாட்டு எழுத 20 நாட்கள் அலையவிட்டு இருக்கீங்களே, சட்டி சுட்டுது கை விட்டது என்று எழுதி கொடுக்கறதா விட்டுட்டு என்று கோபமாக பேசியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் இரவு எட்டரை மணிக்கு பாட்ல் வரும் என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார்.
அதன்பிறகு பி.எஸ்.வீரப்பா சொன்ன வார்த்தையும், கண்ணதாசனின் அப்போதைய நிலையும் அவருக்கு மனதிற்கு வந்து வந்து சென்றுள்ளது. இதை வைத்து அந்த தத்துவ பாடலை எழுதி முடித்த கண்ணதாசன் உடனடியாக பி.எஸ்.வீரப்பாவிடம் கொடுக்கிறார். இதை வாங்கி படித்த அவருக்கு பெரிய ஆச்சரியம். அவர் தற்செயலாக சொன்ன சட்டி சுட்டது கைவிட்டது என்ற வார்த்தையை பயன்படுத்தியே அவர் பாடலை எழுதியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“