தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் பலரையும் தன்வசப்படுத்திய கண்ணதாசன், அரசியல் தலைவர்களிடம் தான் மிகப்பெரிய கோபக்காரன் என்ற பிம்பத்தையும் காட்டியுள்ளார். அதே சமயம் அவர் இளகிய மனம் உள்ளவர் என்பதற்கு அவ்வப்போது சில சம்பவங்கள் வெளியாகும் அந்த வகையில் தற்போது அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
சினிமாவில் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் வீட்டை விட்டு வெளியில் வந்தால் வாசலில், பல தயாரிப்பு நிறுவனத்தின் கார்கள் இருக்கும்.இதில் அவர் எந்த காரில் ஏறி பயணிக்கிறாரோ அந்த நிறுவனத்திற்கு தான் அன்று பாடல் எழுதப்போகிறார்கள் என்று அர்த்தம் அந்த அளவிற்கு பிஸியான கவிஞராக வலம் வந்த கண்ணதாசன், தனது தனிப்பட்ட பயணத்திற்காக ஒரு காரை பயன்படுத்தியுள்ளார்.
இந்த காருக்கான பாபுராவ் என்ற ஒரு டிரைவரை வேலைக்கு வந்துள்ளார். 10 ஆண்டுகளாக கண்ணதாசனுக்கு கார் டிரைவராக இருந்த இந்த பாபுராவ் ஒருநாள், தனக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகளில் மனைவிக்கு ஒரு வியாதி இருப்பது தெரிந்து ஹைாராபாத்தில் இருந்து சென்னைக்கு ஓடி வந்துள்ளார். இங்கு கார் ஓட்டுவதற்கான வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தபோது, கண்ணதாசனின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இதன் மூலம் அவரிடம் கார் டிரைவராக வேலை செய்த பாபுராஜ் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விஷயங்களை கண்ணதாசனிடம் கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன், அறிவு இருக்க உனக்கு? உனக்கு கல்யாணம் ஆகலனு நெனச்சேன், குழந்தை இருக்கு என்றால் இத்தனை வருஷமா ஊருக்கு போகாம இங்க என்னடா பண்ற என்று கேட்டுள்ளார். இதை கேட்ட பாபுராவ் அமைதியாக இருதுள்ளார். ஆனால் கண்ணதாசன் அப்படி இல்லாமல் ஒரு வேலை செய்துள்ளார்.
தனியாக பாபுராவ்க்கு விமானத்தில் டிக்கெட் போட்டு அவருடன் ஹைதராபாத் சென்ற கண்ணதாசன், பாபுராவ் குடும்பத்தினரை தொடர்புகொண்டு, அவர்களிடம் இவரை ஒப்படைத்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து கணவரை பார்த்த பாபுராவின் மனைவி கண்ணதாசன் காலில் விழுந்து வணங்கியுள்ளார். அதன்பிறகு குடும்பத்தை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு, கண்ணதாசன் அங்கிருந்து திரும்பி வந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“