மனிதனின் அத்தனை உணர்வுகளையும் தனது பாடல்கள் மூலம பிரதிபலித்த கவியரசர் கண்ணதாசன், தனது நகைச்சுவை உணர்வின் மூலம் நடிகைகளை பாடல்களில் கிண்டல் செய்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில், எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் பலருக்கும் தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்தவர் கவியரசர் கண்ணதாசன். கவிஞர் மட்டுமல்லாமல், எழுத்தாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட கண்ணதாசன், கடும் கோபக்காரர் என்பது பலரும் அறிந்த ஒரு தகவலாக இருந்தாலும், அவருக்குள்ளும் நகைச்சுவை உணர்வு உள்ளது என்பது அவரை அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
அதேபோல் மனிதனின் அனைத்து உணர்வுகளை பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன், அதில் நகைச்சுவையுடன் கிண்டல் செய்யவும் தவறியதில்லை. எம்.ஜி.ஆர் – சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி, பனித்திரை என்ற படத்தில் நடித்திருந்தார். 1961-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை முக்தா சீனிவாசன் இயக்கியிருந்த நிலையில், ஜெமினி கணேசன் நாயகனாக நடித்திருந்தார்.
கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்தில், கண்ணதாசன் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு பாடல்கள் எழுதியிருந்தனர். கன்னடத்து பைங்கிளி என்று அழைக்கப்படும் சரோஜா தேவி, தமிழுக்கு வந்த புதிதில் தமிழில் சரியாக பேச தெரியாமல் இருந்துள்ளார். ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. இதனிடையே தமிழில் சரியாக பேச தெரியாத சரோஜா தேவியை கவியரசர் கண்ணதாசன் பாடலில் கிண்டல் செய்திருப்பார்.
இந்த படத்தில் வரும், ‘’ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே’’ என்ற பாடல் மிகவும பிரபலமான பாடலாக உள்ளது. இந்த பாடலில் ‘’மழலை போல பேசி பேசி மயங்க வைத்தாயே நான் மயங்கியபோது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே’’ என்ற வரிகளை போட்டிருப்பார். இந்த வரிகள் சரியாக தமிழில் பேச தெரியாத சரோஜா தேவியை கிண்டல் செய்வது பொல் அமைந்திருக்கும். பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடிய இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“