தமிழ் சினிமாவில் முன்னணி கவிஞராக இருந்த கவியரசர் கண்ணதாசன் ஒரு வருட இடைவெளியில் எழுதிய 2 பாடல்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக இருக்கிறது. இது எந்த படத்தில் இடம்பெற்ற எந்த இரண்டு பாடல்கள் தெரியுமா?
Advertisment
1961-ம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பாவமன்னிப்பு. சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன், தேவிகா, சாவித்ரி, எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, சந்திரபாபு கதை எழுதியிருந்தார். ஏ.வி.எம்.நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் பீம்சிங் இந்த படத்தை தயாரித்திருப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்த இந்த படத்திற்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார்.
இந்த படத்தில் இடம்பெறும் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் என்ற பாடல், மத அடிப்படைவாதிகளை விமர்சிக்கும் வகையில் அமைந்திருக்கும். பறவையை கண்டான் விமானம் படைத்தான் எதனை கண்டான் மதத்தை படைத்தான் என்றும் வரிகள், மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை நேரடியாகவே கண்ணதாசன் விமர்சனம் செய்திருப்பார். இந்த படத்தில் இந்துவாக பிறக்கு சிவாஜி கணேசன் இஸ்லாமிய மத்திற்கு மாறிவிடுவது தான் கதை.
Advertisment
Advertisements
அதேபோல் 1962-ம் ஆண்டு, ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான படம் மனிதன் மாறவில்லை. சக்ரபாணி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நாகேஷ்வர ராவ், சாவித்ரி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். கண்டசாலா இசையமைத்த இந்த படத்திற்கு கண்ணதாசன் 2 பாடல்கள் எழுதியிருந்தார். பணக்கார வீட்டு மகனான ஜெமினி கணேசன், ஏழையாக நடித்து சாவித்ரியை காதலித்து திருமணம் செய்துகொண்டு தனது வீட்டுக்கு அழைத்துச்செல்வார். அப்போது வரும் பாடல் தான் காலத்தை மாற்றினான் என்ற பாடல்.
இந்த பாடலில், காலத்தை மாற்றினான், கட்சியை மாற்றினான், கொள்கையை மாற்றினார். ஆனால் மனிதன் மாறவில்லை, அவன் மயக்கம் தீவரவில்லை என்று எழுதியிருப்பார் கண்ணதாசன். ஒரு வருடத்திற்கு முன்பு, பாவமன்னிப்பு படத்தில் எதுவும் மாறிவில்லை, மனிதன் மாறவில்லை என்று எழுதிய கண்ணதாசன், மனிதன் மாறவில்லை படத்தில் அனைத்தும் மாறிவிட்டன மனிதன் மாறவில்லை என்று ஒரு வருட இடைவெளியில் இரு பாடலிலும் பெரும் முரண்பாட்டை காட்டியிருப்பார் கண்ணதாசன். ஆனால் இந்த பாடலில் கடைசிவரை மனிதன் எதில் மாறவில்லை என்பதை கண்ணதாசன் குறிப்பிடவே இல்லை.
அதேபோல் முதலில் இயற்கை அப்படியே இருக்கிறது மனிதன் மாறிவிட்டான் என்றும், 2-வது பாட்டில் அனைத்தும் மாறிவிட்டன மனிதனின் குணம் மட்டும் மாறவில்லை என்று கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளதாக ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“