மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் உயிர்கொடுத்த கண்ணதாசன், கல்லூரி வாழ்க்கையின் இறுதிநாளை மனதில் வைத்து எழுதிய ஒரு பாடல் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், இந்த பாடலை ஏக்கமாக பார்ப்பதா? அல்லது இன்பமாக பார்க்கதா?
Advertisment
இந்தியா சீனா போரை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட படம் ரத்த திலகம். சிவாஜி கணேசன், சாவித்ரி, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை கண்ணதாசன் தயாரித்திருந்தார். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் சிவாஜி கணேசன், சாவித்ரி இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் மோதல் ஏற்பட்டு பிறகு காதலாக மாறும். இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கும் நிலையில், கல்லுரியின் இறுதி நாளில், எங்கள் குடும்பம் சீனாவில் இருக்கிறது. அதனால் நான் சீனாவுக்க செல்கிறேன். ஆனால் உங்களை தான் திருமணம் செய்துகொள்வேன் என்ற சிவாஜியிடம் சொல்லிவிட்டு சாவித்ரி புறப்பட்டு சென்றுவிடுவார்.
கல்லூரி காலத்தை முடித்த சிவாஜி ராணுவத்தில் இணைந்து இந்தியாவுக்கான சீனாவை நோக்கிபோருக்கு செல்லும்போது, சாவித்ரி சீனாவுக்காக போர் செய்ய வருவாரோ என்ற சந்தேகம் சிவாஜிக்கு வரும் ஆனால், சாவித்ரி இந்தியாவின் உளவாளியாக சீனாவில் இருந்திப்பது சிவாஜிக்கு தெரியவரும் அதன்பிறகு என்ன நடந்நதது என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை.
1963-ம் ஆண்டு வெளியானி பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தில், ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்ற பாடலை கண்ணதாசன் தோன்றி பாடியிருப்பார். அதேபோன்று அமைந்த மற்றொரு பாடல் தான் ‘’பசுமை நிறைந்த நினைவுகளே’’ கல்லாரியின் இறுதி நாளில், சிவாஜியும், சாவித்ரியும், தங்களது நண்பர்களை பார்த்து பாடுவது போன்று அமைந்த இந் பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார்.
டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா இணைந்து பாடிய இந்த பாடலில், கல்லூரி மாணவர்களின் இன்பத்தையும் ஏக்கத்தையும் கலந்து வரிகளை அமைத்திருப்பார். இப்போதும் இந்த பாடலை கேட்கும்போது கல்லூரியில் நாம் படத்தை இன்பத்தை சொல்கிறாரா? அல்லது இனிமேல் இந்த காலம் வராது என்ற ஏக்கத்தை சொல்கிறாரா என்ற கேள்வி நம்மில் எழும். இது குறித்து ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“