தனது வரிகள் மூலம் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய கவியரசர் கண்ணதாசன், தனது பாடல் மூலம் பலரையும் அழ வைத்துள்ள நிலையில், தான் எழுதிய பாடல் பதிவின்போது தன்னுடன் சேர்ந்து, எம்.எஸ்.வி, பாடகர் டி.எம்.எஸ் என பலரையும் அழ வைத்துள்ளார்.
1981-ம் ஆண்டு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான படம் கல்தூண். சிவாஜி கணேசன் கே.ஆர். விஜயா இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் 3 பாடல்கள் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த 3 பாடல்களையுமே கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். படம் பெரிய வெற்றி படமாக மாறிய நிலையில், பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கிராமத்தில் மதிக்கத்தக்க விவசாயியாக வலம் வரும் சிவாஜி கணேசனின் மனைவி கே.ஆர்.விஜயா. இவர்களுக்கு 2 மகன்கள். இதில் ஒரு மகன் வாய் திக்கி திக்கி பேசும் நிலையில், மற்றொரு மகன், தான் நான்றாக இருக்கிறோம் என்ற ஆணவத்தில் யாரையும் மதிக்காமல் இருந்து வருகிறார். மேலும் பட்டணத்திற்கு படிக்க போன அவர், பெண்கள் தொடர்பு மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார்.
கிராமத்திற்கு வந்த பிறகும் இதே நிலை தொடர்வதால் இதை கண்டுபிடித்த சிவாஜி கணேசன் மகனை தண்டிக்க, அவன் இனிமேல் உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. உங்களை இந்த ஊரில் அசிங்கப்படுத்துகிறேன் என்று அதற்கான வேலையை தொடங்குகிறார். இதனால் மன வேதனையில் இருக்கும் சிவாஜி கணேசன் மனம் வருந்தி பாடும் பாடல் தான் ‘’வளர்த்த கிடா முட்ட வந்தா’’ என்ற பாடல்.
2 மகன்களை பெற்ற ஒரு தந்தையின் நிலையில் இருந்து கவியரசர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலை எழுதும்போதே கண்ணதாசன் அழுதுள்ளார். அதன்பிறகு இந்த பாடலுக்கு பின்னணி இசைமைத்த எம்.எஸ்.விஸ்வநாதனும் அழுந்த நிலையில், பாடல் பாடிய டி.எம்.எஸ் இறுதியில் ஒரே வரியை 3 விதமான குரலில் பாடி அழுதுள்ளார். நடிக்கும்போது சிவாஜியும் அழுதுள்ளார்.
இந்த பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கண்ணதாசன் தனது பாடல் மூலம் பலரையும் அழ வைத்திருந்தாலும் ஒரே பாடலுக்காக இசையமைப்பாளர் நடிகர், பாடகர், என பலரையும் அழ வைத்தது மட்டுமல்லாமல் தானே இந்த பாடலை எழுதும்போது அழுதுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“