40 வயது ஆசிரியர் மீது 18 வயது மாணவிக்கு காதல்; இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்? பாட்டில் சொன்ன கவியரசர்!

பாடல் ஆசிரியர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் கண்ணதாசன். நடிகராக ஒருசில படங்களில் சிறப்பு தொற்றங்களில் நடித்திருந்தாலும், தயாரிப்பாளராக சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல படங்களை தயாரித்துள்ளார்.

பாடல் ஆசிரியர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் கண்ணதாசன். நடிகராக ஒருசில படங்களில் சிறப்பு தொற்றங்களில் நடித்திருந்தாலும், தயாரிப்பாளராக சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல படங்களை தயாரித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil Cinahs

தமிழ் சினிமாவில் மனித உணர்ச்சிகளி அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்துள்ள கவியரசர் கண்ணதாசன், வயதில் குறைந்த பெண் ஒரு மூத்த ஆணை திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாக வைத்து ஒரு பாடலை எழுதி இருக்கிறார். அந்த பாடல் எந்த படத்தில் இடம் பெற்றுள்ளது தெரியுமா?

Advertisment

பாடல் ஆசிரியர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் கண்ணதாசன். நடிகராக ஒருசில படங்களில் சிறப்பு தொற்றங்களில் நடித்திருந்தாலும், தயாரிப்பாளராக சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல படங்களை தயாரித்துள்ளார். அதேபோல், பாடல்கள் எழுதுவதில், தனக்கு இணை யாரும் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன் எம்.எஸ்.விக்கு நெருங்கிய நண்பர்.

எம்.எஸ்.வி கண்ணதாசன் இருவரும் இணைந்துவிட்டாலே அந்த படம் பெரிய வெற்றிதான் என்று சொல்லும் அளவுக்கு காலத்தால் அழியாத பல பாடல்களை இயற்றியுள்ளனர். அந்த வகையில், வயதில் மூத்த ஆணை ஒரு பெண் விரும்பினால் வாழ்க்கை என்னாவாகும் என்பதை அடிப்படையாக வைத்து சிவாஜி படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார் கவியரசர் கண்ணதாசன். அந்த படத்தின் பெயர் ஆண்டவன் கட்டளை, அந்த பாடலின் பெயர் 'அமைதியான நதியினிலே ஓடும்' என்ற பாடல் தான். இந்த பாடலுக்கு எம்.எஸ்.வி தான் இசை.

கடந்த 1964-ம் ஆண்டு கே.சங்கர் இயக்கத்தில் வெளியான படம் தான் ஆண்டவன் கட்டளை, சிவாஜி கணேசன், தேவிகா இணைந்து நடித்திருந்த இந்த படத்தில், ஏவிஎம்.ராஜன், புஷ்பலதா, அசோகன், பாலாஜி, சந்திரபாபு, உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.வி இசை அமைக்க, கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். எம்.எஸ்.வியுடன் இணைந்து ராமமூர்த்தியும் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

Advertisment
Advertisements

படத்தின் கதைப்படி, கல்லூரியில் பேராசிரியராக இருக்கும், 40 வயதானா சிவாஜி கணேசனை, மாணவியாக இருக்கும் 18 வயதானா தேவிகா காதலிப்பார். இந்த சுட்சிவேஷனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருக்கும் சிவாஜி கணேசன் விரக்தியில் பாடுவது போன்ற ஒரு பாடல் தான். இது, 2-3 வயது சிறியவர்களை காதலிக்கலாம் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் இப்படி பெரிய வயது வித்தியாசம் இருப்பவரை திருமணம் செய்துகொண்டால், அவர்களின் வாழ்க்கை நரகாகிவிடும் என்பதை உணர்த்தும் வகையில், அமைதியானா நதியினிலே ஓடும், ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் என்று எழுதியிருப்பார்.

வயதில் குறைந்த பெண்ணை திருமணம் செய்யும் ஆண் வயதானவனராக மாறும்போது அந்த பெண்ணுக்கு வாலிப வயது இருக்கும். இதனால் தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்த்தவே அந்த வரிகளை கண்ணதாசன் அமைத்துள்ளதாக பேச்சாளர் வாசுகி மனோகரன் கூறியுள்ளார்.

Tamil Cinema Update Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: