நெய்யூறும் கானகத்தில்... சிவாஜி படத்தின் ஹிட் பாடல் : கண்ணதாசன் எழுதியது தவறா?
1963-ம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பார் மகளே பார். சிவாஜி கணேசன், சவுக்கார் ஜானகி, முத்துராமன், ஏவிஎம் ராஜன், எம்.ஆர்.ராதா, மனோரமா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்
1963-ம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பார் மகளே பார். சிவாஜி கணேசன், சவுக்கார் ஜானகி, முத்துராமன், ஏவிஎம் ராஜன், எம்.ஆர்.ராதா, மனோரமா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்
சிவாஜி நடிப்பில் வெளியான பார் மகளே பார் என்ற படத்தில் வரும் நெய்யூறும் காணகத்தில் என்ற பாடல், பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்த பாடலின் மூலம் கண்ணதாசன் என்ன சொல்ல வருகிறார், காணகத்தில் எப்படி நெய் ஊறும் என்பது போன்ற பல கேள்விகள் எழுவதை தடுக்க முடியவில்லை.
Advertisment
1963-ம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பார் மகளே பார். சிவாஜி கணேசன், சவுக்கார் ஜானகி, முத்துராமன், ஏவிஎம் ராஜன், எம்.ஆர்.ராதா, மனோரமா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து இசைமைத்திருந்தனர். இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
பெரும் பணக்காரரான சிவாஜிக்கு, குழந்தை பிறக்கும் சமயத்தில் அவர் மனைவியுடன் இருக்கமாட்டார். அதேபோல் அவர் மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது, அருகில் ஒரு நாட்டிய பெண்மணிக்கும் குழந்தை பிறக்கும். இந்த இரு குழந்தைகளையும் குளிப்பாட்ட எடுத்து சென்ற நர்ஸ், மின்சாரம் தாக்கி இறந்துவிட, குழந்தை பெற்ற நாட்டிய பெண்மணியும், குழந்தையை விட்டுவிட்டு வெளியேறிவிடுவார்.
இதனால் சிவாஜிக்கு தன் குழந்தை எது என்று தெரியாமல், இரண்டு குழந்தையும் வளர்ப்பார். அப்போது குழந்தைக்கு கணவன் மனைவி இருவரும் இணைந்து தாலாட்டு பாடுவது தான் இந்த பாடல், நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே, நெய்யூறும் காணகத்தில் கைகாட்டும் மானே என்று தொடங்கும் இந்த பாடலில், கதைக்களம் மதுரையில் நடப்பதால், நீரோடும் வைகை என்பது சரியாக இருக்கிறது.
Advertisment
Advertisements
அதே சமயம் நெய்யூறும் காணகத்தில் கைக்காட்டும் மானே என்றால் என்ன பொருள் என்பது பலருக்கும் சந்தேகம். இதில் நெய் என்றால் வளமையை குறிக்கும் சொல். அப்படி பார்த்தால் நெய்யூறும் காணகம் என்ற சொல்லுக்கு, வளமை மிகுந்த காட்டில் இருந்து கை காட்டும் மானே என்பது பொருள் என்று, ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“