தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் உச்சம் தொட்ட கவிஞரான கவியரசர் கண்ணதாசன், நல்லவனுக்கம் ரொம்ப நல்லவனுக்கும் இருக்கும் வித்தியாசத்தை எடுத்துரைக்கும் வகையில் எழுதிய ஒரு பாடல் பலரும் அறியாத ஒரு பாடலாக உள்ளது.
Advertisment
தனி மனிதனின் அனைத்து உணர்ச்சிக்கும் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்தவர் தான் கண்ணதாசன். இவர் எழுதிய பல பாடல்கள் இன்றம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சோகம் என்றாலும் மகிழ்ச்சி என்றாலும் கண்ணதாசன் பாட்டு இல்லாமல் வாழ்க்கை நகராது என்ற சொல்லும் அளவுக்கு அவரது பாடல்கள் பலதரப்பட்ட மக்களின் மனதை கவர்ந்துள்ளது.
அதேபோல் நல்லவன் கெட்டவன், குடிகாரன் என அனைவருக்கும் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் இவர்க்ள கூட்டணியில் வெளியான ஒரு பாடல் நல்லவனுக்கும் ரொம்ப நல்லவனுக்கும் இருக்கும் வித்தியாசத்தை எடுத்துரைக்கும் ஒரு பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் படித்தால் மட்டும்போதுமா?
1962-ம் ஆண்டு இயக்குனர் பீம்சிங் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிவாஜி கணேசன், கே.பாலாஜி, சாவித்ரி, ராஜசுலோக்ஜனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். படிக்காத சிவாஜி முரடன் ஆனாலும் ரொம்ப நல்லராக இருக்கும் நிலையில், அவரது அண்ணனான படித்த பாலாஜி, சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிடுவார். அதுதான் படத்தின் திருப்புமுனையாக அமையும்.
இதில் அண்ணனுக்கு தம்பியும் தம்பிக்கு அண்ணனும் திருமணத்திற்கு பெண் பார்க்க போகும்போது, தம்பி சிவாஜிக்கு பார்த்த பெண் அழகாக இருப்பதால், அண்ணனான கே.பாலாஜி, கடிதத்தை மாற்றி எழுதி, சிவாஜிக்கு பார்த்த பெண்னை திருமணம் செய்துகொள்வார். இதனால் பெரிய பிரச்சனை உருவாகும். இந்த நிலையில், இவர்களின் எஸ்டேட் திருவிழாவில் வரும் ஒரு பாடல் காட்சி தான் கண்ணதாசன் எழுதிய அந்த பாடல்.
இந்த பாடலில் சிவாஜிக்கு டி.எம்.சௌந்திரராஜனும், பாலாஜிக்கு, பி.பி.ஸ்ரீனாவாஸ், தோட்டத்தில் பாடும் தொழிலாளர்களுக்காக ஏ.எல்.ராகவன் என இந்த பாடலை 3 பாடகர்கள் பாடியிருப்பார்கள். நல்லவன் எனக்கு நானே நல்லவன் என்ற தொடங்கும் இந்த பாடலில் நல்லவனுக்கும் ரொம்ப நல்லவனுக்கும் இருக்கும் வித்தியாசத்தை காட்டியிருப்பார் கண்ணதாசன்.
கே.பாலாஜி பாடும்போது நல்லவன் எனக்கு நானே நல்லவன், சொல்லிலும் செயலிலும் நல்லவன் என்றும், சிவாஜி பாடும்போது, உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை ஊருக்கு கெடுதல் செய்தவன் இல்லை வல்லவன் ஆயினும் நல்லவன் என்று பாடியிருப்பார். இந்த பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“