தமிழ் சினிமாவில் கண்ணதாசன் உன் ஸ்டூடியோ எரிந்து நாசமாய் போகட்டும் என்று சொன்னதை தொடர்ந்து அன்று மாலையே அவர் சொன்ன அந்த ஸ்டூடியோ பற்றி எரிந்துள்ளது. இதை இசையமைப்பாளர் எம்.எஸ்.வி பார்த்துள்ளார்.
பாதுவாக நல்லவர்கள் வாயால் சாபம் வாங்க கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதேபோல் அறச்சொல் பேசினால் அப்படியோ நடக்கும் என்ற ஐதீகமும் உள்ளது. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர், ஒரு படத்திற்காக நான் கைதி என்று பேசியபோது, அன்று மாலையே லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிறை சென்றுள்ளார் என்று தகவல் உள்ளது.
அதே மாதிரியான ஒரு சம்பவம் கவியரசர் கண்ணதாசன் வாழ்வில் நடந்துள்ளது கடந்த 1959-ம் ஆண்டு கண்ணதாசன் கதை எழுதியதில் உருவாக படம் சிவகங்கை சீமை. எஸ்.எஸ்.ராஜேந்திரன், வரலட்சுமி, எம.எஸ்.ராஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை கே.ஷங்கர் இயக்க, விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்துள்ளனர். படததின் அனைத்து பாடல்களைளும் கண்ணதாசன் எழுதியுள்ளார்.
படத்தின் ஷூட்டிங் சென்னையில் ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், ஒரு நாள் படப்பிடிப்புக்காக, முந்தைய நாளே அந்த ஸ்டூடியோவின் அதிபரிடம் பணம் கொடுத்து கண்ணதாசன் புக் செய்துள்ளார், இதனைத் தொடர்ந்து மறுநாள் படக்குழுவினர் அந்த ஸ்டூடியோவுக்கு வர, யாரையும் அதிபர் உள்ளே விடவில்லை. கண்ணதாசனிடம் பேசிய தொகையை விட அதிக தொகை பேசி ஒரு மாயாஜால படத்திற்காக ஸ்டுடியோவை வாடக்க்கு விட்டுள்ளார்.
இதை தெரிந்துகொண்ட கண்ணதாசன், உன் ஸ்டூடியோ இருப்பதை விட, எரிந்து நாசமாய் போகட்டும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். அன்று மாலையே அந்த ஸ்டூடியோ பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த இசையமைப்பாளர் எம்.எஸ்.வி, பதறியடித்துக்கொண்டு ஓடி, கண்ணதாசனிடம், அண்ணே இனி வாய் தவறி கூட உங்கள் வாயில் இருந்து இது போன்று பேசிவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அன்று முதல் கண்ணதாசன் இவ்வாறு பேசுவதில்லை என்று முடிவெடுத்தாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“