முத்துராமன் நடித்த பேரும் புகழும் படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலில் இரண்டு வரிகளுக்காக அந்த படத்தின் இயக்குனர் அவரை வலைவீசி தேடியுள்ளார்.
Advertisment
1976ம் ஆண்டு முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான படம் பேரும் புகழும். முத்துராமன் சுஜாதா நடித்த இந்த படத்தில் மனோரமா, நாகேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்த நிலையில், ஒரு தாலாட்டு பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
இதில் கர்ப்பமாக இருக்கும் சுஜாதாவை வண்டியில் வைத்து இழுத்துக்கொண்டு செல்லும் முத்துராமன் பாடுவது போன்று அமைந்துள்ள இந்த பாடல் தான் ‘’தானே தனக்குள் ரசிக்கின்றாள்’’ என்ற பாடல். கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்த பாடல், இன்றும் ஒரு கர்ப்பிணி பெண்ணின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பாடலாக அமைந்துள்ளது.
இந்த பாடலை கண்ணதாசன் எழுதும்போது அவருக்கு உதவியாக இருந்தவர் ராமக்கண்ணன். கண்ணதாசன் சொல்ல, சொல்ல பாடலை அவர் தான் எழுதியுள்ளார். இந்த பாடலை ஒரு காபி எடுத்து இவர்கள் வைத்துக்கொண்டு, பட நிறுவனத்திற்கு ஒன்று கொடுத்துள்ளனர். இதை உதவி இயக்குனர்கள் ஒரு காபி எடுத்துக்கொண்டு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கொடுத்துள்ளனர்.
அடுத்த நாள் இந்த பாடலை பாட யேசுதாஸ் வந்துள்ளார். அந்த காலக்கட்டத்தில் பிஸியாக இருந்த யேசுதாஸ் விட்டால் பிடிக்க முடியாது என்ற நிலையில், மும்பையில் ஒரு பாடலை பாடி முடித்துவிட்டு, விமானம் மூலமாக சென்னை திரும்பியுள்ளார். அதே சமயம் சென்னயைில் இந்த பாடலை முடித்துவிட்டு, அடுத்து அவர் திருவனந்தபுரம் செல்ல வேண்டும்.
மதியம் 2-4 மணிக்கு யேசுதாஸ் கால்ஷீட் கொடுத்திருந்த நிலையில் காலையில் பார்த்தால் பாடலில் 2 வரிகள் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த இயக்குனர் பாடலில் 2 வரிகள் இல்லை என்பதை எம்.எஸ்.விக்கு சொல்லாமல், பாடலை கண்ணதாசன் சொல்ல சொல்ல எழுதிய ராமகண்ணனை பார்த்தால் அவர் வெளியூர் சென்றுள்ளார். அதன்பிறகு கவியரசர் கண்ணதாசனை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
இதனால் கண்ணதாசனை தேட, அவரது வீடு, ரெக்கார்டிங் தியேட்டர், லாடஜ் உள்ளிட்ட பல இடங்களுக்கு கார்கள் சென்றுள்ளது. அப்போது எம்.எஸ்.வியின் உதவியாளர் ஒருவரிடம் இயக்குனர் முக்தா சீனிவாசனின் மகன் சொல்ல, அவர் உடனடியாக, இவர் கண்ணதாசன் இருக்கும் இடத்தை கூறியுள்ளார். அதன்பிறகு அவருக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, போனை எடுத்த கண்ணதாசன் விட்டுப்போன 2 வரிகளை கூறியுள்ளார்.
அத்துடன் பிரச்சனை முடிந்ததா என்றால் இல்லை. குழந்தை தாயின் வயிற்றில் பெண் குழந்தை எந்த பக்கம் உதைக்கும், ஆண் குழந்தை எந்த பக்கம் உதைக்கும் என்ற சந்தேகம் இருந்துள்ளது. ஆனால் இதற்கு மேல் கண்ணதாசனுக்கு போக் செய்ய முடியாது என்று நினைத்த படக்குழுவினர், அங்கிருந்த ஒரு நடிகையிடம் கேட்டு தெரிந்துகொண்டு அதன்பிறகு பாடல் பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“