/indian-express-tamil/media/media_files/2024/11/15/CPDJu1eqGBRECSlKYH6Z.jpg)
தீபாவளி செலவுக்காக தனது அண்ணனிடம் பணம் கேட்ட கண்ணதாசனுக்கு பணம் கிடைக்காதபோதும், உடனடியாக தனக்கு கிடைத்த பணத்தில் பாதியை அண்ணனுக்கு கொடுக்க சென்றுள்ளார் கண்ணதாசன் என்று மேடை பேச்சாளர் நெல்லை கண்ணன் கூறியள்ளார்.
மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் ஆறுதல் அளித்தவர் தான் கவியரசர் கண்ணதாசன். காதல், சோகம், மகிழ்ச்சி, என அனைத்திற்கும் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்த கண்ணதாசன், வாழ்க்கையின் தத்துவங்களையும், தனது வாழ்வில் நடந்த தான் சந்தித்த சம்பவங்களையும் தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரராக இருந்தவர்.
பாடல்கள் மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பல திறமைகயை உள்ளடக்கிய கண்ணதாசன், பல புத்தகங்களையும எழுதியுள்ளார். கண்ணதாசன் தனக்கு சிக்கல்கள் மற்றும் பண நெருக்கடி வந்தபோதெல்லாம், ஏதாவது ஒரு வகையில், தனக்கான உதவியை கேட்டு பெற்று விடுவார். அந்த வகையில் ஒருமுறை தீபாவளி தினத்தில், பிள்ளைகளுக்கு துணி எடுக்க பணம் இல்லாததால், தனது அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் தன்னிடம் பணமே இல்லை என்று சொல்லிவிடவே, கண்ணதாசன் ஏமாற்றத்துடன் திருப்பியுள்ளார். அந்த நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கப்போவதாக சொல்லி, ரூ10 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கண்ணதாசன், தனது பிள்ளைகளுக்கு கூட துணி எடுக்காமல், அந்த பணத்துடன் அண்ணன் வீட்டுக்கு சென்று, நீ செலவுக்கு பணம் இல்லை என்று சொன்னாயே, இதில் இருந்து ஒரு 5000 வைத்துக்கொள் என்று கொடுத்துள்ளார். இந்த தகவலை பேச்சாளர் நெல்லை கண்ணன் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசிய ஒரு வீடியோவில், கண்ணதாசன் ஒரு தீவாளிக்கு ஒரு துணி எடுக்க கையில் பணம் இல்லை. அவருக்கு 12 பிள்ளைகள். ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பாளர். பெரிய பணக்காரர். ஆனால் அவர் பணம் இல்லை என்று சொன்னவுடன், அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற பாடலை எழுதியள்ளார். அதில், பெட்டைக்கோழிக்கு கட:டு சேவலை கட்டி வைத்தவன் யாராடா, அது 8 குஞ்சுகள் பெற்றெடுத்தபின் வருந்தவில்லையே தாயடா என்ற வரிகளை எழுதியிருப்பார். இந்த வரிகள் கண்ணதாசன் தனக்கு தானே எழுதிக்கொண்ட வரிகள் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.