கண்ணதாசன் - வாலி இருவரும் தனித்தனியாக பல படங்களுக்கு பாடல்கள் எழுதியிருந்தாலும், இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், கண்ணதாசனின் ஒரு பாடலில் ஒரு வார்த்தையை கேட்டு வியந்துள்ளார் வாலி. அது என்ன பாடல்? என்ன வார்த்தை?
Advertisment
1978-ம் ஆண்டு, கே.விஜயன் இயக்கத்தில் வெளியான படம் தியாகம். சிவாஜி கணேசன, லட்சுமி, பாலாஜி ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தை கே.பாலாஜி தயாரித்திருந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா படத்திற்கு இசையமைத்திருந்ததார். படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஒரு பாடலின் ஒரு வரியை கேட்டு கவிஞர் வாலி வியந்துள்ளார்.
சிவாஜி - லட்சுமி இருவரும் காதலிப்பார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே நெருங்கம் அதிகமாக இருந்தபோதும், ஒரு கட்டத்தில் சிவாஜி கெட்டவர் என்று புரிந்துகொள்ளும் லட்சுமி அவரிடம் இருந்து விலகிவிடுவார். அப்போது சோகத்தில் அவர் பாடும் பாடல் தான் 'வசந்தா கால கோலங்கள்' என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை கேட்ட கவிஞர் வாலி ஒரு வார்த்தையை மட்டும் கேட்டு, வியந்துள்ளார்.
கவிஞர் பழனிபாரதியிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்த கவிஞர் வாலி, கண்ணதாசனால் மட்டும் தான் அப்படிப்பட்ட சொற்களை எழுத முடியும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட பழனிபாரதி, என்ன சொல் அய்யா என்று கேட்க, நல்ல வேளை திருவுலம் என்று எழுதியிருக்கிறார். திருவுலம் என்றால், இறைவனின் திட்டம். தமிழ் சினிமாவில் இந்த வார்த்தையை யாரும் பயன்படுத்துவதில்லை. இந்த வார்த்தை இந்த பாடலை எங்கோ கொண்டு சென்றவிட்டது என்று கவிஞர் வாலி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“