தமிழ் சினிமாவில் பல்துறை வித்தகர் என்று பெயரேடுத்த டி.ராஜேந்தர், தனது படங்களுக்கு அவரே பாடல் எழுதி இசையமைக்கும் வழக்கத்தை வைத்திருந்த நிலையில், இவரது ஒரு பாடலை கவியரசர் கண்ணதாசனே வியந்து பாராட்டியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இது என்ன பாட்டு, எந்த படத்தில் வந்தது என்பதை பார்ப்போமா?
Advertisment
தமிழ் சினிமாவில், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என சினிமாவில் உள்ள அனைத்து துறைகளையும் கற்று தேர்ந்தவர் தான் டி.ராஜேந்தர். ஒரு தலைராகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இவர், அடுத்தடுத்து தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து நடிகராகவும் இயக்குனராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.
அதேபோல் தனது படங்களில் நாயகிகளை தொடாமல் எப்படி காதலிக்க வேண்டும் என்று பலருக்கும் சொல்லிக்கொடுத்தவர் டி.ராஜேந்தர் தான். 1980-90 காலக்கட்டங்களில் இவரது படங்கள் வெளியாவது, இவரது படங்களின் இசை வெளியீட்டு விழா நடப்பது என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோல் தனது படங்கள் மட்டுமல்லதமல், மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ள ராஜேந்தர் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டி.ராஜேந்தர். இந்த படத்தின் கதை மட்டும் தான் இவருடையது படத்தை இயக்கியவர் இப்ராஹிம் என்று சொன்னாலும், படத்தை உண்மையாக இயக்கியது டி.ராஜேந்தர் தான் என்று சினிமா வட்டாரத்தில் பல தகவல்கள் வெளியாகி வந்தது. அதேபோல் இந்த படத்தில் பாடல்களுக்கு இசையமைத்தவரும் பாடல்களை எழுதியவரும் டி.ராஜேந்தர் தான்.
இந்த படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் குறிப்பிடத்தகக் ஒரு பாடலான இருக்கும் ‘வாசம் இல்லா மலரிது’ என்ற பாடலை கவியரர் கண்ணதாசனே வியந்து பாராட்டியுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றனர். ஒருதலையான காதலிக்கும் தனது காதலியை பார்த்து நாயகன் பாடுவது போல் அமைந்த இந்த பாடல், இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“