தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கவிஞராக இருந்த கண்ணதாசன், தமிழில் பல பாடல்களை எழுதியிருந்தாலும், அவர் தெலுங்கில் ஒரு பாடல் எழுதி அது தமிழ் படத்தில் இடம்பெற்று பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், கதாசிரியர், பத்திரிக்கையாளர் என பன்முக திறமை கொண்டவர் சோ. காமெடி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், குணச்சித்திர நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார். அதேபோல் இயக்குனர் கண்ணதாசனுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்களில் முக்கியமானவராக இருந்த சோ, கண்ணதாசனை வற்புறுத்தி தெலுங்கு பாடலை எழுதுமாறு கூறியுள்ளார்.
கடந்த 1971-ம் ஆண்டு முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான படம் அருணோதயம். சிவாஜி கணேசன், சரோஜா தேவி, முத்துராமன், மனோரமா ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருநதார். இந்த படத்தில் சோ ஒரு தனி காமெடி ட்ராக்கை உருவாக்கி நடித்திருப்பார். இதில். மனோரமாவை. சோவும விரும்புவார் மற்றொரு பைல்வானும் விரும்புவார். அவர்கள் இருவரையும் கண்கானிக்க ஒரு முடிவு செய்வார் சோ. அப்போது ஒரு பாடல் தேவை என்ற யோசித்துள்ளார்.
இது குறித்து படத்தின் இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசனிடம் சொல்ல, படத்தில் எல்லா பாடல்களும் முடிந்துவிட்டது. கண்ணதாசன் தான் எழுதியுள்ளார். ஏற்கனவே உனது காமெடி ட்ராக் நீளமாக இருக்கிறது. அதனால் பாடல் வேண்டாம் என்ற சொல்ல, சோ விடாமல் இந்த இடத்தில் பாடல் வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு இயக்குனரும் சம்மதம் சொல்ல, பாடல் கேட்டு கண்ணதாசனிடம் சென்றுள்ளார் சோ. இந்த படத்திற்கான எல்லா பாட்டும் எழுதியாச்சு இப்போ வந்து பாட்டு கேக்குறீயே என்ற கண்ணதாசன் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
அதன்பிறகு சோ வற்புறுத்த ஒரு கட்டத்தில் கண்ணதாசன் ஒப்புக்கொள்ள, சோ சுட்சிவேஷனை சொல்லிவிட்டு இந்த பாட்டு தெலுங்கில் வேண்டும் என்ற சொல்ல, கண்ணதாசன், நான் தமிழ் கவிஞர் என்னை போய் தெலுங்கில் எழுத சொன்னால் எப்படி என்று கேட்க, எனக்கு தெரிந்த ஒரு தெலுங்கு நண்பர் இருக்கிறார். நீங்கள் தமிழில் எழுதும் பாடலை அவரிடம் கொடுத்து தெலுங்கில் மொழிபெயர்க்க சொல்லி மாற்றிக்கொள்ளலாம் என்ற சோ கூறியுள்ளார். அப்போது எழுதிய பாடல் தான் ஏமண்டி என்ற பாடல். கண்ணதாசன் தனது திரை வாழ்க்கையில் எழுதிய ஒரே தெலுங்கு பாடல் இதுதான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“