தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்க எதிராக பாடல் எழுத வந்திருந்தாலும், அவரை சந்தித்த முதல் சந்திப்பில், ஒரு கவிதை படி கண்ணதாசனை வியப்பில் ஆழ்த்தியவர் தான் கவிஞர் வாலி.
தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்ட வாலி, திருச்சி வானொலியில், நாடகங்கள் எழுதி வந்த நிலையில், பாடல் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்னை வந்துள்ளார். தனக்கு தெரிந்த சினிமா பிரபலங்களை வைத்து பல இசையமைப்பாளர்களிடம், வாய்ப்புக்காக அலைந்த வாலிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஒரு கட்டத்தில் விரக்தியான கவிஞர் வாலி. இனிமேல் வேண்டாம் என்று முடிவு எடுத்து சொந்த ஊருக்கு திரும்ப தயாராகியுள்ளார்.
அப்போது அவரை சந்தித்த பிரபல பாடகரும் அவரது நெருங்கிய நண்பருமான பி.பி.ஸ்ரீனிவாஸ், தான் இப்போது பாடிய ஒரு பாடலை பாடிக்காட்டியுள்ளார். இந்த பாடலை கேட்ட வாலி, இனிமேல், ஒரு சிறந்த பாடல் ஆசிரியர் ஆகிவிட்டு தான் சென்னையில் இருந்து புறப்பட வேண்டும் என்று முடிவு செய்து மீண்டும் முயற்சி செய்துள்ளார். அந்த பாடல் கண்ணதாசன் எழுதிய மயக்கமா கலக்கமா என்ற பாடல். இந்த பாடலை கேட்டவுடன் எப்படியாவது கண்ணதாசனை சந்தித்துவிட வேண்டும் என்று வாலி முடிவு செய்துள்ளார்.
அதன்பிறகு, தனது நண்பர் வி.கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து வாயப்பு தெட தொடங்கியுள்ளார். அப்படி ஒருநாள், கவிஞர் வாலிக்கு கண்ணதாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உதவி இயக்குனர் மாராவுடன் கவிஞர் வாலி கண்ணதாசனை சந்திக்க, நீங்கள் திருச்சி ரேடியோவில் நாடகங்கள் எழுதியவர் தானே என்று கேட்டுள்ளார் கண்ணதாசன். இந்த கேள்விக்கு பதில் சொல்லாத கவிஞர் வாலி, ‘’காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை பாட்டுக்குள் வைத்தவனே கூட்டுக்குள் குயிலாக கூவி திரியாமல், காலம் கழித்தவனே’’ என்று ஒரு கவிதையை பாடியுள்ளார்.
தன்னை வாழ்த்தி வாலி பாடிய இந்த கவிதையை மிகவும் ரசித்த கண்ணதாசன், நாம் அடிக்கடி சந்திக்கலாம் என்று வாலியின் தோலில் தட்டியுள்ளார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் கண்ணதாசனுக்கு எதிராக கவிஞராக உருமாறிய வாலி பின்னாளில் அவருடன் நெருங்கிய நட்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“