மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஒரு படத்திற்கு இசையமைத்த வேதா, ஆங்கில பாடலை தழுவி போட்ட ஒரு மெட்டுக்கு கண்ணதாசன், அசத்தலான தமிழ் வரிகள் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பார். இந்த பாடல் என்ன? எந்த படத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை பார்ப்போமா?
Advertisment
தமிழ் சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர் நடிப்பில், கடந்த 1966-ம் ஆண்டு வெளியான படம் வல்லவன் ஒருவன். மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில், டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய இந்த படத்தில், ஜெய்சங்கருடன் இணைந்து, விஜயலட்சுமி, தேங்காய் சீனிவாசன், ஷீலா, விஜயலதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேதா இசையமைப்பில், கவியரசர் கண்ணதாசன் படத்தின் பாடல்களை எழுதியிருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. குறிப்பாக இந்த படத்தில் வரும் பளிங்குனால் ஒரு மாளிகை என்ற பாடல், இன்றளவும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கான டியூனை அமெரிக்கன் கம்போசர் ஆர்.டி.ஷாவுடைய, ஆல்பத்தில் இருந்து இன்ஸ்பிரேஷனாக வேதா அமைத்திருந்தார். இந்த டியூனுக்கு கண்ணதாசன் எப்படி பாடல் எழுதுவார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
Advertisment
Advertisements
அந்த நேரத்தில் உள்ளே வந்த கண்ணதாசன், டியூனை வாசிங்க என்று சொல்ல, வேதா டியூனை வாசித்துள்ளார். அதனை கேட்ட கண்ணதாசன், தனது உதவியாளரிடம் இப்போது நான் சொல்வதை எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு இந்த பாடலை கூறியுள்ளார். இந்த பாடலை பாடகி எல்.ஆர்,ஈஸ்வரி தனக்கே உரிய பாணியில் அசத்தலாக பாடியிருப்பார். ஆங்கில டியூனுக்கு தமிழில் வரிகள் அமைத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியது கண்ணதாசன் என்றால் அதற்கு தனது குரலால் உயிர் கொடுத்தவர் எல்.ஆர்.ஈஸ்வரி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“