கடவுள் முருகன் பாடல்கள் அத்தனையும் அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும் என்றாலும், கந்தன் கருணை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஒரு பாடலை எழுதுவதற்காக ஆண்டாளின் கண்ணன் பாடலை வைத்து எழுதியிருப்பார் கண்ணதாசன்.
Advertisment
1967-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் கந்தன் கருணை. சிவக்குமார் முருகன் வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்தை கண்ணாசனின் அண்ணன் ஏ.எல். சீனிவாசன் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்திற்கு, இசையமைத்திருந்தார்.
அதேபோல் படத்தின் 13 பாடல்களை கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் ஹிட்டாக மாற்றியிருப்பார். இந்த படத்தில் பி.சுசீலா பாடிய ‘’மனம் படைத்தேன்’’ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்திருந்தாலும், இந்த பாடலை எழுதுவதற்கு துணையாக இருந்தவர் ஆண்டாள் கண்ணன் மீத கொண்ட காதல் பாடல் தான் என்பத பலரும் அறியாத ஒரு தகவல்.
கடவுள் முருகனின் திருமணத்தை மையமான வைத்து எடுக்கப்பட்ட இந்த பாடல் காட்சிக்கு முன்னதாக, முருகன் தெய்வானை திருமணம் முடிந்து, இருவரும் பாடுவது போன்ற ஒரு பாடல். இதில் முருகனாக சிவக்குமார் தெய்வானையாக கே.ஆர்.விஜயா நடித்திருந்த நிலையில், வள்ளியாக ஜெயலலிதா நடித்திருந்தார். இந்த பாடல் சிவக்குமார் – கே.ஆர்.விஜயா இருவரும் இணைந்து பாடுவது போன்று காட்சிகள் இருக்கும்.
இந்த பாடலின் தொடக்கம், கண்ணன் மீது கொண்ட காதலினால் ஆண்டாள் பாடுவது போல் அமைந்த, மத்தளம் கொட்ட எனற பரிசுரத்தில் இருந்து தனது பாடலுக்கான சரணத்தை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருப்பார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அதே சமயம், முருகனின் படங்களில் கந்தன் கருணை ஒரு முக்கிய படமாக போற்றப்படுகிறது. இந்த தகவலை ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“