Advertisment

என்.எஸ்.கே கொடுத்த 1 ரூபாய் சம்பளம்... 10 ஆயிரமாக மாற்றிய கருணாநிதி : முதல் சந்திப்பு சுவாரஸ்யம்

கருணாநிதியின் மந்திரி குமாரி நாடகத்தை பார்த்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் அதிபர் டி.ஆர்.சுந்தரம், அந்த கதையை படமாக்கும் முயற்சியில் கருணாநிதியிடம் பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Karunanith

கருணாநிதி - என்.எஸ்.கிருஷ்ணன்

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருப்பவர் கலைஞர் கருணாநிதி. தொடக்கத்தில் சினிமா வாய்ப்பு கிடைத்த இவருக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. 1947-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதன் முதலில் நாயகனாக அறிமுகமான ராஜகுமாரி என்ற படத்தில் வசனகர்த்தாவாக சினிமாவில் அறிமுகமானவர் தான் கருணாநிதி. இந்த படம் வெளியானபோது இவரின் பெயர் படத்தின் டைட்டில் கார்டில் இடம்பெறவில்லை.

Advertisment

இதனால் விரக்தியான கருணாநிதி, சினிமாவை விட்டு விலகி தனது சொந்த ஊருக்கே திரும்பி விட்ட நிலையில், மந்திரி குமாரி என்ற நாடகத்தை எழுதி தனது ஊருக்கு அருகில் நாடகங்களை நடத்திக்கொண்டிருந்தார். இந்த நாடகத்தை பார்த்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் அதிபர் டி.ஆர்.சுந்தரம், அந்த கதையை படமாக்கும் முயற்சியில் கருணாநிதியிடம் பேசியுள்ளார்.

கதையை டி.ஆர்.சுந்தரத்திற்கு கொடுக்க முன் வந்த கருணாநிதியை அந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாகவும் நியமித்த டி.ஆர்.சுந்தரம் அவருக்கு மாதம் ரூ500 சம்பளம் பேசி தனது நிறுவனத்திலேயே வேலைக்கும் வைத்துள்ளார். அதன்பிறகு எல்லீஸ் ஆர் டங்கன் – டி.ஆர்.சுந்தரம் ஆகியோர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான மந்திரி குமாரி திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தை பார்க்க சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்த நடிகரும் இயக்குனருமான என்.எஸ்.கிருஷ்ணன், படத்தை பார்த்த போது அதில் இருந்த வசனங்கள் அவரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்பிறகு கருணாநிதியை சந்தித்த என்.எஸ்.கே நான் தங்கியிருக்கும் அறைக்கு வர முடியுமா என்று கேட்க, அவரும் ஒப்புக்கொள்கிறார். அதன்பிறகு கருணாநிதியை அழைத்துக்கொண்டு என்.எஸ்.கே தனது அறைக்கு செல்கிறார்.

அறைக்கு வந்தவுடன், மந்திரி குமாரி படம் ரொம்ப நல்லா இருக்கு. அதற்கு காரணம் உங்களின் கூர்மையான வசனங்கள் தான் என்று சொல்ல, கருணாநிதி மிக்க நன்றி என்று கூறியுள்ளார். அதன்பிறகு என்.எஸ்.கே நான் மணமகள் என்று ஒரு படம் பண்ணுகிறேன். அதற்கு வசனங்கள் எழுதி தர முடியுமா என்று கேட்க, தாராளமாக எழுதி தருகிறேன் என்று கருணாநிதியும் ஒப்புக்கொள்கிறார். இதற்கு சம்பளம் என்ன கேட்குறீங்க என்று என்.எஸ்.கே கேட்கிறார்.

இதை கேட்ட கருணாநதி நான் யாரிடமும் சம்பளம் கேட்டதில்லை. நீங்களே முடிவு செய்து எவ்வளவு கொடுத்தாலும் சரிதான் என்று கூறியுள்ளார். அதற்கு என்.எஸ்.கே நான் என்ன கொடுத்தாலும் சம்மதமா என்று கேட்க, சம்மதம் என்று கருணாநிதி கூறியிருக்கிறார். குறும்புக்காரரான என்.எஸ்,கே ஒரு துண்டு சீட்டை எடுத்து 4 ஜீரோ எழுதி அதன்பிறகு ஒன்று (00001)எழுதி கருணாநிதியிடம் கொடுக்க அவர் அதை பார்த்து அதிர்ச்சியாகிறார்.

ஆனாலும் என்.எஸ்.கே நம்மிடம் குறும்பு செய்கிறார் என்று உறுதி செய்த கருணாநிதி, அந்த சீட்டை வாங்கி திருப்பி அவரிடமே கொடுத்து இந்த தொகை எனக்கு சம்மதம் என்று கூறியுள்ளார். இப்போது 4 ஜீரோவுக்கு அடுத்து இருந்த ஒன்று இந்த பக்கம் வந்து 10000 ஆக மாறுகிறது. இதை பார்த்த என்.எஸ்.கே கருணாநிதியின் குறும்புத்தனத்தை பாராட்டியதோடு அவருக்கு அதே சம்பளத்தை கொடுத்து தனது படத்திற்கு வசனம் எழுத கூறியுள்ளார்.

அதன்பிறகு என்.எஸ்.கே வீட்டு மாடியில் அமர்ந்து வசனங்களை எழுத தொடங்கிய கருணாநிதி எழுதி எழுதி பேப்பரை சிதறவிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அதை கவனித்தபோது அத்தனை பேப்பர்களும் சரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமாக கருணாநிதி கவனிக்க அருகில் என்.எஸ்கே கைட்டிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது உச்சத்தில் இருந்த என்.எஸ்.கே கருணாநிதியின் திறமைக்கு கொடுத்த மரியாதை தான் இது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment