ஷங்கர் இயக்கத்தில் தயாரான ஒரு படத்திற்காக பாடல் எழுதிய வாலி, அந்த பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட டியூனையே மாற்றியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இது குறித்து வாலியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி உட்பட 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்தவர் கவிஞர் வாலி. தன் வாழ்நாளின் இறுதிவரை வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்ட அவர், தற்போதைய முன்னணி நடிகரான சிம்பு வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதேபோல் எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் தொடங்கிய இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
அதேபோல் சிவாஜி தொடங்கி இன்றைய முன்னணி நடிகரான சிம்பு வரை பல நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத் வாலி, இயக்குனர் ஷங்கரின் படங்களில் பாடல்கள் வரவேற்பை பெறுவதற்கான காரணத்தை பற்றி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் தொடங்கி தற்போது வரவிருக்கும் இந்தியன் 2 படம் வரை பல பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கரின் படங்களில் பாடல்கள் தனி இடத்தை பிடித்துள்ளனர்.
தனது படங்களில் பாடல்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்பும் ஷங்கர் அதற்காக எந்த எல்லைக்கும் போகக்கூடியவது. பாடல் காட்சிக்காக பிரம்மாண்ட செட் அமைத்து டான்சர்ஸ் எல்லாம் இருந்தாலும், பாடல் வர தாமதமானால், அவர்களை காக்க வைப்பாதே தவிர, அவசர காதியில் ஒரு பாடலை எழுதி கொடுக்க சொல்லவே மாட்டார்.அதேபோல் ஒரு பாடலுக்காக ஏ.ஆா.ரஹ்மான் போட்ட டியூனையே மாற்றியுள்ளார் கவிஞர் வாலி.
Advertisment
Advertisement
ஷங்கர் இயக்குனராக அறிமுகமானது முதல் அவரது படங்களுக்கு ஒரு ஒரு பாடல்கள் மட்டும் எழுதி வந்த வாலி, இந்தியன் படத்தில் 3 பாடல்களை எழுதியுள்ளார். இதற்காக டியூன் கொடுத்த ஷங்கர் இந்த 3 பாடல்களையும் நீங்கள் தான் எழுதி கொடுக்க வேண்டும் என்று சொல்ல, எப்போவும் ஒரு பாட்டு தானே ராசினு சொல்லுவ இப்போ என்ன 3 பாடல் என்று வாலி கேட்டுள்ளார். அதற்கு ஷங்கர் 3 ராசி இருந்தால் என்ன என்று கேட்டு எழுதி தருமாறு கூறியுள்ளார்.
இதில் அக்கடானு நாங்க நட போட்டா என்ற பாடல் தான் வாலி எழுதிய முதல் பாடல். இந்த பாடலின் டியூன் ஒரு ப்ளாட்டாக இருந்துள்ளது. இதை கேட்ட வாலி நான் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன். நீ ரஹ்மான்கிட்ட சொல்லு என்று ஷங்கரிடம் கூறியுள்ளார். அதை கேட்ட ஷங்கர், நீங்கள் சொன்னால் ரஹ்மான் எதுவும் சொல்ல மாட்டார் என்று சொல்ல, டியூனை அட்ஜெஸ்ட் செய்து பாடலை எழுதியுள்ளார். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“