தமிழ் சினிமாவில் தனக்கு எதிராக பாடல் எழுத வந்திருந்தாலும், வாலியிடம் நெருங்கிய நட்பில் இருந்த கவியரசர் கண்ணதாசன், அவருக்கு 3 அட்வைஸ் கொடுத்துள்ளார். இந்த அட்வைஸ்களை வாலி தனது வாழ்நாளின் இறுதிவரை கடைபிடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.
அதே சமயம் வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர், எழுத வேண்டிய ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடிய கவிஞர் வாலி, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், தனது நண்பருடன் டிவிஎஸ் கம்பெனியில் வேலைக்கு சேர மதுரை கிளம்பியுள்ளார். அப்போது கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்ட வாலி மதுரை செல்லும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார்.
அதன்பிறகு இதயத்தில் நீ படத்தில் தொடங்கி, எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் வாலி, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவிஞராக உருவெடுத்தார். கண்ணதாசன் எம்.ஜி.ஆர் மோதல் காரணமாக, கண்ணதாசன் விலகியதால், தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பும் வாலிக்கு கிடைத்துள்ளது.
அதன்பிறகு கண்ணதாசன் – வாலி இருவரும் நெருங்கிய நட்பில் இருந்தபோது, ஒருநாள் கண்ணதாசன் வாலிக்கு 3 அட்வைஸ் கொடுத்துள்ளதது, இதில் முதலாவதாக ஒன்று இருக்கும்போது ஒன்றை தேடி போகாதே, 2-வது சொந்த படம் எடுக்காதே, 3-வது எந்த அரசியல் கட்சியிலும் சேராதே என்று கூறியுள்ளார். கண்ணதாசன் சொன்ன இந்த 3 அட்வைஸ்களையுமே கவிஞர் வாலி கடைசிவரை கடைபிடித்துள்ளார். இதை வாலியே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“