இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தாலும், ஆரம்பத்தில் அவர் இயக்கிய ஒரு படத்திற்கு, வாலி படத்தின் டைட்டிலை மாற்றியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் இறுதிவரை வாலிப கவிஞர் என்று போற்றப்படுவபர் வாலி. எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த வாலி, நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் பல இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவியராக வலம் வந்தனர்.
அதேபோல், இசையமைப்பாளர் இளையராஜா அவரது சகோதரர் கங்கை அமரன் ஆகியோருடன் மிகவும் நெருங்கிய நட்புடன் இருந்த வாலி, கங்கை அமரன் இசையிலும் பாடல்களை எழுதியுள்ளார். அப்படி வெளியான வாழ்வே மாயம் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று காலம் கடந்து இன்றும் நிலைத்திருக்கறது. அதேபோல் இயக்குனர் பாக்யராஜ் இசையிலும் வாலி பாடல்களை எழுதியுள்ளார்.
கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபு, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் நிலையில், விஜய் நடிப்பில் கோட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 600028 படத்தின் மூலம் தான் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில், 3 பாடல்களை வாலி எழுதியிருந்தார்.
தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய, சரோஜா கோவா, பிரியாணி உள்ளிட்ட படங்களில் 3 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். வெங்கட் பிரபு இயக்குனராக முதல் படத்தை இயக்கும்போது அவரது அப்பா வாலியிடம் வெங்கட் பிரபுவை அனுப்பியுள்ளார். அந்த படத்திற்கு பாடல்களை எழுதிய வாலி, படத்திற்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய் என்று கேட்க, ‘’எங்க ஏரியா உள்ளே வரதே’’ என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
இதை கேட்ட வாலி, என்னயா பேர் வச்சிருக்க, இந்த பேரை கேட்டா எவனும் படத்தை வாங்க வர மாட்டான்யா, என்று கூறி சென்னை 28னு வை என்று கூறியுள்ளார். அதன்பிறகு தான் சென்னை 600028 என்ற டைட்டிலுடன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய வெற்றிப்படமாக மாறி இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“