தமிழ சினிமாவில், காமெடி குணச்சித்திரம் என நடிப்பில் அசத்தி வரும் கோவை சரளா, புதிதாக ஒரு காரை வாங்கியபோது பிரபலம் ஒருவரின் வீட்டில் பூகம்பம் வெடித்துள்ளது. இதற்கு காரணம் என்ன தெரியுமா?
1979-ம் ஆண்டு வெளியான வெள்ளிரதம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாக கோவை சரளா, அதன்பிறகு 1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், கோவை சரளாவுக்கு வாய்ப்புகள் குறித்தது. ஒரு கட்டத்தில் பிஸியாக நடிகையாக வலம் வந்த இவர், தனது படத்தில் நடிக்க வேண்டும் என்று கமல்ஹாசனே காத்திருந்த நிகழ்வுகள் கூட நடந்துள்ளது.
இந்நிலையில், கோவை சரளா சினிமாவில் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில், கடன் தொல்லை காரணமாக, இயக்குனரும் நடிகருமான கலைஞானம், தனது காரை விற்பனை செய்ய, அந்த காரை கோவை சரளா வாங்கியுள்ளார். இந்த காரை வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு சென்ற அவர், வீட்டில் கார் பார்க்கிங் இல்லாததால், வெளியில் நிறுத்தியுள்ளார். அந்த தெருவின், கடைசியில், கலைஞானத்தின் மேனேஜர் குடியிருந்துள்ளார்.
அந்த மேனேஜர், கலைஞானத்தின் கார், கோவை சரளா வீட்டில் இருப்பதை பார்த்து, அடுத்த படத்திற்கு அவரை புக் செய்ய வந்திருப்பார் கலைஞானம் என்ற நினைத்துள்ளார். அதன்பிறகு மதியம், இரவு என பார்த்தபோது அந்த கார் அங்கேயே நின்றுள்ளது. இதனால் சந்தேகப்பட்ட அவர், உடனடியாக கலைஞானம் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம், அய்யா, கோவை சரளா வீட்டில் இருக்கிறார் கொஞ்சம் கண்டிச்சு வையுங்கள் அம்மா என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
அவர் இப்படி சொல்லவும், கலைஞானத்தின் மனைவி அவர் மீது சந்தேகப்பட்டு, சண்டை போட்டுள்ளார். 3 நாட்கள் இந்த சண்டை நீடித்த நிலையில், கலைஞானத்தின் மகள் முதல் அனைவரும் அவரை தப்பாக நினைத்துள்ளது. அதன்பிறகு கலைஞானத்தின் மனைவி, கோவை சரளா வீட்டில் நீங்கள் தங்கியிருந்தது எனக்கு தெரியாதா என்று கேட்க, எதானால் இந்த சண்டை என்பதை புரிந்துகொண்ட கலைஞானம், கார் விற்ற விஷயத்தை அவரிடம் சொல்ல, அதன்பிறகு சமாதானம் ஆகியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“