நடிகர் திகலம் சிவாஜி கணேசன், ஒரு நடிப்பு பல்கலைகழகமாக தமிழ் சினிமாவில் இன்றும் போற்றப்படும் நிலையில், அவர் நடிகராக மாற வேண்டும் என்று நினைத்தது எப்போது என்பது குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில், நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவாஜிக்கு, அந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி வசனத்தில் வெளியான இந்த படத்தில் வசனங்கள் பலராலும் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
இந்த படத்தில் முதலில் சிவாஜி கணேசன் நடிக்க வேண்டாம் என்று ஏ.வி.மெய்யப்ப செட்டியாரே மறுத்ததாகவும், அந்த படத்தின் மற்றொரு தயாரிப்பாளரானபி.ஏ.பெருமாள் முதலியார் என்பவர் தான் சிவாஜி கணேசன் தான் இந்த படத்தின் நாயகன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். அதன்பிறகு வெறு வழியில்லாமல், ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ஒப்புக்கொண்ட நிலையில், பல தடைகளை கடந்த இந்த படம் வளர்ந்து வந்துள்ளது.
1952-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி வெளியான பராசக்தி தமிழ் சினிமாவின் முக்கிய வெற்றிப்படமாக மாறி இன்றும் ஒரு சரித்திரம் படைக்கும் படமாக நிலைத்திருக்கிறது. இந்த படத்திற்கு சிவாஜி வேண்டாம் என்று சொன்ன ஏ.வி.மெய்யப்ப செட்டியார், அதன்பிறகு தனது ஏ.வி.எம்.நிறுவனம் தயாரிக்க, சிவாஜியை வைத்து பல படங்களை தயாரித்துள்ளார். பராசக்தி படம் கொடுத்த வெற்றி சிவாஜிக்கு தமிழ் சினிமாவில் மேலும் பட வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
Advertisment
Advertisement
தமிழ் சினிமாவில் நடிப்புக்கே இலக்கணம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசன், இவ்வளர் பெரிய நடிகராக உயர்வுக்கு அவரது அப்பாவும் அவரது குடும்ப சூழ்நிலையும் தான் காரணம். சிவாஜி கணேசன் பிறந்த அன்று அவரது அப்பா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு தேசியவாதி என்பதால், அவரை கைது செய்துள்ளனர். அதன்பிறகு சிவாஜிக்கு 6-7 வயதாக இருக்கும்போது அவரது வீட்டுக்கு அருகில் கட்டபொம்மன் நாடகம் போட்டதை பார்த்துள்ளார்.
அப்போது அவரது மனதில் தானும் ஒரு நடிகனாக வேண்டும் என்று ஆசை முளைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அப்பா ஜெயிலுக்கு போய்ட்டு வந்ததால், வீட்டில் வறுமை சாப்பாடு இல்லை, எப்படியாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு கிளம்பி, தனக்கு அப்பா அம்மா இல்லை என்று சொல்லி நாடக கம்பெனியில் சேர்ந்துள்ளார். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நாடகத்தில் நடிக்க தொடங்கிய சிவாஜி இன்று தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று போற்றப்படுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“