கமல்ஹாசன் படம் என்றாலே ஒரு லிப் டூ லிப் கிஸ் சீன் இருக்கும் ஆனால் நான் முதல் முறை அவருடன் நடிக்கும்போது அழுதுவிட்டேன் என்று நடிகை மீனா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினமாவில் காதல் மன்னன் என்ற பட்டத்துடன் வலம் வந்த நடிகர் தான் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து அதன்பிறகு துணை நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக உயர்ந்த இவர், தற்போது உலக நாயகன் என்று போற்றப்படுகிறார். தனது திரை வாழ்க்கையில் கமல்ஹாசன் தான் நடித்த பல படங்களில் நாயகிகளுடன் லிப் டூ லிப் காட்சிகளில் நடித்திருப்பார்.
கமல்ஹாசன் போல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக உயர்ந்தவர் தான் நடிகை மீனா, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மீனா, 1996-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான அவ்வை சண்முகி என்ற படத்தில் முதல்முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ள மீனா, பொதுவாக கமல் சார் படங்களில் லிப் டூ லிப் காட்சி இருக்கும் என்று தெரியும். ஆனால் இந்த படத்தில் கமிட் ஆகும்போது எனக்கு அந்த ஞாபகங்கள் இல்லை. அப்படி இருக்கும்போது ஒருநாள் இயக்குனர் என்னிடம் அடுத்து லிப் டூ லிப் காட்சி என்று சொன்னவுடன் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் என் அம்மாவிடம் என்று நீங்கள் தான் எப்படியோவது இயக்குனரிடம் சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.
என் அம்மா இயக்குனரிடம் சொல்வதற்கு முன்பே ஷாட் ரெடி என்று சொல்லிவிட்டார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நான் அழுதுகொண்டே போனேன். இயக்குனர் என்னை கீழே படுக்க சொன்னார். அப்போது எனக்கு பெரும் அழுகையாக வந்துவிட்டது. கமல்சார் என்னை கிஸ் பண்ண நெருங்கி வந்தபோது இந்த ஒருமுறை இது வேண்டாமே என்று சொன்னார் அப்போ தான் எனக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது என்று மீனா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“